Puttalam Online
chikva

குறை கண்:18 பழைய மாணவர்களை பாடசாலை நிர்வாகம் ஏன் உள்வாங்குவதில்லை.?

(AM Minhas)

வெட்கப்படுகிறேன்…..!

நான் மணல் குன்று மு. ம. வி கல்வி பயின்ற மாணவன் என்று சொல்ல இன்று இதை நான் உணர்ந்தேன் நாளை நீங்கள்…

நான் இப்படி கூறுவது எனக்கு மிகவும் மனவேதனையாக உள்ளது ஆனால் அதுதான் உண்மை. நேற்று நான் பயின்ற பாடசாலையில் நடைபெற்ற இல்ல விளையாட்டு போட்டியை காணச்சென்றிந்தேன் அங்கு நடப்பதை பார்த்ததும் ஏன் எமது பாடசாலை இப்படி சென்று விட்டது இது அண்றிருந்த எமது பாடசாலையா என எண்ணம் தோன்றும் அளவிற்கு இருந்தது முன்பெல்லாம் வளர்ந்து வரும் பாடசாலையாக இருந்த போது புத்தளத்தில் உள்ள இரு பெரும் பாடசாலைகலோடு ஒப்பிடும் அளவிற்கு உயர்ந்து காணப்பட்டது ஆனால் தற்போது எமது பாடசாலை முன்னேற்ற படவேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக உணர்கிறேன் .

மேலும் இவ்வருடம் நடைபெற்ற இல்ல விளையாட்டு போட்டியை எத்தனை பழைய மாணவர்கள் பார்த்தீர்கள் என்று தெரியவில்லை பார்த்திருந்தால் உங்களுக்கு விளங்கி இருக்கும். அது எப்படி என்றால் ஒரு வளர்ச்சி குன்றிய பாடசாலையில் எவ்வாறு நடாத்தப்படுமோ அதைவிடவும் மோசமாக இருந்ததென்றே கூற வேண்டும் இதற்கு என்ன காரணம்? எனக்கு தெரிய வில்லை மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியது.

சில மாதங்களுக்கு முன்பு நான் அறியப்பட்டேன் எமது பாடசாலையில் உள்ள ஒலிபெருக்கிகள் சரியாக நினைவில்லை அதாவது 100,000 அல்லது அதற்கு அதிகமாக கொடுத்து புதிதாக நிர்மாணிக்க பட்டதென்று ஆனால் இன்று அப்படி ஒன்றும் விளங்க வில்லை அதாவது மைதானத்தில் இருந்து ஒலிபெருக்கியின் மூலம் வந்த சத்தம் மற்றும் தேசியகீதம் ஒலிக்கும் போதெல்லாம் பார்வையாளர்களின் முகம் சுளிக்கும் வகையில் காணப்பட்டது. ஏன் ஒழுங்கான band group ஒன்று காணப்படவில்லை.

முன்பெல்லாம் எமது பாடசாலையில் நடாத்தப்படும் இல்ல விளையாட்டுப்போட்டி வெளியே பெரிதாக பேசப்படும் குறிப்பாக மாணவர் அணிவகுப்பு மற்றும் சிறுவர்களின் ட்ரில் நிகழ்ச்சிகள் மற்ற பெரிய பாடசாலைகளை விட சிறப்பாக இருக்கும் என்று கூறுவார்கள் ஆனால் இன்று அங்கு நின்று பலர் கூறிய வார்த்தை இந்த கன்றாவிய பார்க்கவா வந்தோம் என்று இது எவ்வளவு பின்னடைவு என்று யோசித்து பாருங்கள் நண்பர்களே அத்தருணத்தில் ஒருத்தன் சொல்கிறான் எங்கட தில்லையடி பாடசாலை இதை விட சிறப்பாக இருக்கும் என்று அத்தருணத்தில் எனக்கு வெட்கமாக இருந்தது இது எனது பாடசாலை என்று மேலும் அவர்கள் கூறியது தவறொன்றும் இல்லை அது உண்மைதானே..!!

இதற்கெல்லாம் யார் காரணம்? யார் பொறுப்பு? பாடசாலை அதிபரா? இல்லை அங்கு கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசான்களா? அல்லது கல்வி பயிலும் மாணவர்களா? அல்லது பாடசாலை நிர்வாகிகளா? அல்லது பழைய மாணவர்களா? இதற்கு தீர்வுதான் என்ன நண்பர்களே

மேலும் ஒரு பாடசாலை தரம் உயர்வற்கு கல்வி மாத்திரம் போதாது விளையாட்டு துறையும் முக்கிய பங்கு வகிக்கின்றது இதனை எவரும் மறுக்க முடியாது ஆகவே எமது பாடசாலை தரம் உயர வேண்டும் எனவே இனிவரும் காலங்களில் இதுபோன்று பாராமுகமாக இருக்காமல் பழைய மாணவர்களாகிய நாங்களாலவது ஒன்றிணைந்து இதனை சிறப்பாக செய்து தரவேண்டும் மணல்குன்று பாடசாலை எமது அடையாளம் அதை நாம் விட்டு கொடுக்க கூடாது நண்பர்களே

மேலும் மணல்குன்றின் அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் ஒன்று ஏன் பழைய மாணவர்களை உள்வாங்குவதில்லை எங்களின் உரிமையை எங்களுக்கு தாருங்கள் நீர் எங்களுக்கு முறையான அழைப்பை கொடுங்கள் நீங்கள் பழைய மாணவர்களை பாராமுகமாக இருப்பதனாலேயே நாமும் அவ்வாறு இருக்கின்றோம் முறையான அழைப்பை தந்து பாருங்கள் நாம் சிறப்பாக செய்து தருவோம். இன்ஷாஅல்லாஹ்

மணல்குன்று எமது அடையாளம்..!

WAK


One thought on “குறை கண்:18 பழைய மாணவர்களை பாடசாலை நிர்வாகம் ஏன் உள்வாங்குவதில்லை.?

  1. Fathima asla says:

    In shaa allah…. எமது பாடசாலை முன்னேற்றத்திற்காக கரம் நீட்ட நாம் தயார்.. அதற்கு பாடசாலை நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கினால் நன்று..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All