Puttalam Online
other-news

‘சுதந்திரம் சுகமானது’ இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 70 வது சுதந்திர தின செய்தி

  • 4 February 2018
  • 334 views

எம். ஆர். எம். ருஷ்தி
ஊடகப் பிரிவு – இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

சுதந்திரம் சுகமானது. அதனை அனுபவிப்பது ஒவ்வொரு மனிதனதும் வாழ்வுரிமை. அந்த வாழ்வுரிமையை உலகில் அனேகமானவர்கள் போராடிப் பெற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அன்றும் இன்றும் ஆளாகியிருக்கின்றனர். நாமும் அதனை போராடித் தான் பெற்றுள்ளோம். எமது 70 ஆவது சுதந்திர தினத்தில்…

எமக்குக் கிடைத்த சுதந்திரத்தை மீட்டிப் பார்க்கும் தருணத்தில்… சுதந்திரத்திற்காக ஏங்கிக் கிடக்கும் எண்ணற்றவர்களின் பிரச்சினைகளை நாம் மறந்து விட முடியாது.

சுதந்திரம் தனிமனிதனுக்கும் உரித்தானது. நாட்டுக்கும், இனங்களுக்கும், கலாச்சாரங்களுக்கும் மற்றும் மதங்களுக்கும் உரித்தானது.

அனைத்து வகையான சுதந்திரங்களும் உலகில் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையை சுமந்து வாழும் மக்களாக இலங்கை மக்கள் இருக்க வேண்டும்…, இருக்கின்றனர்.

எனினும் அதை விரும்பாத சக்திகள் உலகில் இருக்கவே செய்யும். அந்த சக்திகளை வென்று சுதந்திரத்தைப் பாதுகாக்கும் எமது மரபைத் தொடர்ந்து பேணுவோமாக!

ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
தலைவர்
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All