Puttalam Online
other-news

சிலாவத்துறையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரை

  • 6 February 2018
  • 381 views

சிலாவத்துறையிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா

சிலாவத்துறை  நகரத்தினை நவீனமயப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு தேவைாயன விஸ்தீரனமான காணியினை பெறும் வகையில்  கடற்படையினருடன் பேச்சுக்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க  இவ்வருடம் சிலாவத்துறையின் அபிவிருத்தி வருடமாக மாறியுள்ளதாக தெரிவித்தார்.

கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின்  அழைப்பின்  பேரில் சிலவாத்துறைக்கு திங்கட்கிழமை  வருகைத்தந்த பிரதமர் உரையாற்றும் போதே மேற்கண்டாறு கூறினார்.

அமைச்சர் றிசாத் பதியுதீன்,பிரதி அமைச்சர் அமீர் அலி,வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் ஷரீப்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் முசலி பிரதேச சபையின் எதிர்கட்சி தலைவர்  முஹம்மத் ஜசீல் உட்பட வேட்பாளர்கள் மற்றும் பெருந்திரளான மக்கள் கலந்து  கொண்ட இந்த கூட்டத்தில் பிரதமர் மேலும் உரைாயற்றுகையில் –

சிலாவத்துறை உள்ளிட்ட இப்பிரதேசத்தில் இருந்து புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் புத்தளம் உள்ளிட்ட பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர்.அவர்கள் தற்போது மீள்குடியேறிவருகின்றனர்.இன்னும் மக்களின் மீள்குடியேற்றம் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது.இவர்களது வாழ்வாதார தேவைகள் அபிவிருத்திகள் என்பன இன்னும் அதிகமாக பெற்றுக் கொடுக்கப்பட வேண்டியுள்ளது.

அதனை மேற்கொள்ளும் அமைச்சர் றிசாத்  பதியுதீனின் பணிகளுக்கு எமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவுள்ளோம்.அதே போல் இம்மக்கள் வாழ்ந்த காணிகள் அவர்களுக்கு மீள கொடுக்கப்படவேண்டும்,அவர்களது காணி எல்லைகளுக்கும் அதே போல்  வனப்பகுதியுடைய காணிகள் அவ்வாறே பாதுகாக்கப்பட வேண்டும்.எமது அரசாங்கத்தின் கிராமத்து ஆட்சியில் இப்பிரதேசம் பாரிய அபிவிருத்தி கானும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கின்றேன்.இந்த பிரதேச தமிழ் மக்களின் பிரச்சினைகள்  தீர்க்கப்படும்,

வரண்டு போயுள்ள இந்த விவசாய நிலங்கள் புத்தெழுச்சி பெரவுள்ளது.அநுராதபுரத்தில்  இருந்து வருகின்ற மல்வத்து ஓயா நீர் தேக்கத்தின் மூலம்,மன்னார் மற்றும் வவுனியா விவசாயிகள் நன்மை அடைவார்கள்.முசலி மக்களது பல தேவைகள் உள்ளன.சிலாவத்துறை வைத்தியசாலை நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.தற்போது இந்த பணியினை அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆரம்பித்துள்ளார்.வைத்தியசாலை மிகவும் முக்கியமானது.குறிப்பாக இவ்வாறு மிகவும் பின்தங்கிய பகுதியில வாழும் மக்கள் வைத்திய தேவைகளுக்காக துார இடங்களுக்கு செல்லும் போது மரணங்கள் சம்பவிக்கலாம்.இதனை தவிர்க்க இந்த வைத்தியசாலை மிகவும் முக்கியமானதாகும்.

மத்திய அரசாங்கத்தின் ஆட்சி நல்லாட்சியிடம் இருக்கின்றமையினால்,இந்த கிராமத்தின் ஆட்சியும் எமது கட்சி தேசிய கட்சியிடம் இருக்கின்ற போது எவ்வித தடைகளுமின்றி அபிவிருத்திகள்  இடம் பெறும்,எமது இநத இரு வருட ஆட்சியில் பல அபிவிருத்திகளை ஆரம்பித்துள்ளோம்.குறிப்பாக கடன் சுமையில் இருந்து இந்த நாட்டினை பாதுகாத்துனளோம்.இது அபிவிருத்தியின் காலம் எம்முடன் ஒன்றுபடுவதன் மூலம் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியும்,

இந்த சிலாவத்துறை பிரதேசம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக பார்க்கப்படுகின்றது.கொண்டச்சியி ல் அமைச்சர் றிசாத் பதியுதீன் கைத்தொழில் பேட்டையினை கொண்டவரவுள்ளார்.

அதற்கு சமாந்தரமாக இளைஞர்களினதும்,யுவதிகளினதும் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் தொழல் பயிற்சி நிலையமொன்றினை இங்கு ஆரம்பிக்க நடவடிக்கையெடுக்கவுள்ளேன்.இவ்வா றான அபிவிருத்திகள் இங்கு வருகின்ற போது மக்கள் அதிகமான நன்மைகளை அடைவார்கள்.இத்தோடு இங்கிருக்கின்ற மீனவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்,அவர்களுக்கான மீனவ படகுகளை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கையெடுக்கப்படும்.

மீண்டும் ஒரு முறை இந்த சிலவாத்துறைக்கு என்னை வருமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் அழைத்துள்ளார்.அதற்கு ஏற்ப அமைச்சர் ஹலீமிடம்,அமைச்சர் றிசாத் பதியுதீன்விடுத்த வேண்டுகோளின் பேரில் இவ்வருடத்திற்கான தேசிய மீலாத் விழாவினை இங்கு நடத்த அனுமதியினையும் வழங்கியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன் என்றும் பிரதமர் ரணில் விக்மரசிங்க கூறினார்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All