Puttalam Online
regional-news

6 ஆம் கட்டை ரெட்பானவில் ஜும்மா பள்ளி திறந்துவைப்பு

  • 18 February 2018
  • 1,151 views

புத்தளம் 6 ஆம் கட்டை பிரதேச ரெட்பானா கிராமத்தில் நேற்று முன்தினம் வெள்ளிகிழமை (16) புதிதாக கட்டப்பட்ட ஜும்மா பள்ளி ஒன்று பகல் சாப்பாட்டுடன் ஊராரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குறிப்பிட்ட பள்ளிவாசல் முற்றுமுழுதாக தலைநகரை சேர்ந்த சட்டத்தரணி ஒருவரின் தனிப்பட்ட நன்கொடையால் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.மறைந்த தனது தாயாரின் பெயரில் சதகதுல் ஜாரியாவாக இந்த பள்ளியை அவர் கட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த பள்ளியை ஒரு ஜும்மா பள்ளியாக்க தேவையான அனைத்து விடயங்களையும் அவரே முன்னின்று செய்துள்ளார்.

பல லட்சம் மதிப்புள்ள பள்ளியை கட்டிவிட்டு இதுவரை அவரின் பெயரை யாருக்கும் தெரியப்படுத்தவில்லை. “வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது, சதகாவை அந்தளவு இரகசியமாக செய்யுங்கள் என்ற நபி மொழியை பிரதிபலிக்கும் வகையில் அமைந்த இந்த பெரும் சதகா மற்றையவர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணம் ஆகும்.

ரெட்பானாவுக்கோ, புத்தளத்திற்கோ எந்த சம்பந்தமும் இல்லாத இவர் தேவையுடைய இந்த இடத்தை தேடிவந்து உதவியது இதில் உள்ள இன்னொரு பாடமாகும். உதவி எய்கின்ற பெயரில் எல்லோரும் ஒரே இடத்திற்கு உதவி செய்யாமல், தேவை உள்ள இடத்தை தேடி அங்கு உதவி செய்வது என்பது நாம் செய்யும் உதவியின் பெறுமதியை கூட்டும்.

சட்டத்தரணி இப்பள்ளியை புத்தளம் நகரின் கட்டிட நிர்மான நிறுவனமான HM Builders இன் ஊடாக கட்டிமுடித்துள்ளார். கடந்த இரண்டு மாதமாக இப்பள்ளி கட்டுமான வேலை நடைப்பெற்று நேற்றைய தினம் முதல் ஜும்மாவை தொடர்ந்து ஊராரிற்கான பகல் சாப்பாட்டுடன் பள்ளி பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

வல்ல அல்லாஹ் குறிப்பிட்ட நபரின் நிய்யத்தை ஏற்றுக்கொள்வதோடு, அவரின் தாயாரின் பாவங்களை மன்னித்து ஜென்னத்துல் பிர்தௌஸை வழங்குவானக. மேலும் அவரிற்கு மேலும் மேலும் செல்வத்தை வழங்கி தேவையுடையவர்களை பயன்பெற செய்வானாக.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All