Puttalam Online
regional-news

மரதன் ஓட்டத்தில் முதலிரு இடங்களையும் சலீம் சகோதரர்கள் சுவிகரிப்பு

  • 18 February 2018
  • 1,222 views

M.R.M Irfan
Head of Management

2018 இல்ல விளையாட்டுப் போட்டியின் ஒரு அங்கமான மரதன் ஓட்டப்போட்டி நேற்று முன்தினம் (2018.02.16) வேப்பமடுவிலிருந்து ஆரம்பமாகி புத்தளம் நகரைச் சுற்றி கல்லூரியை வந்தடைந்தது.

இவ்வோட்டப்போட்டியில் தாரிக் இல்லத்தைச் சேர்ந்த M.S.A Hakeem முதலாம் இடத்தையும், கமால் இல்லத்தைச் சேர்ந்த முதலாம் இடத்தைப் பெற்றவரின் சகோதரர் M.S.A Salman இரண்டாம் இடத்தையும்,

இக்பால் இல்லத்தைச் சேர்ந்த M.F. Agar மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் முன்னாள் ஸாஹிராவின் விளையாட்டு ஆசிரியர் A.O நெய்னா மரிக்கார் அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியை எமது கல்லூரி HPE ஆசிரியர்கள் நெறிப்படுத்தினார்கள்

இப்போட்டிக்கு மத்தியஸ்தர்களாக கடமையாற்றியவர்களுக்கும், அனுசரனை வழங்கியவர்களுக்கும் விளையாட்டுக் குழு சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All