Puttalam Online
interviews

உணர்ந்து தருவதை பெரிதும் விரும்புகிறோம் – மஜாஸ்

 • 20 February 2018

புத்தளம் நகரை பிரதிநிதித்துவப்படுத்தி கத்தாரில் இயங்கும் கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களின் கூட்டமைப்பின் தலைவர் சகோ. மஜாஸ் அவர்களை இரவு நேரம் ஒன்றில் சந்தித்து அமைப்பு தொடர்பில் வினா தொடுத்தவேளை எமக்காக நேரமொதுக்கி பகிர்ந்து கொண்ட விடயங்களை புத்தளம் ஒன்லைன் வாசகர்கள் உங்களுக்காக..!

நேர்காணல்: கத்தாரிலிருந்து எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்

 • நிர்வாக அங்கத்தவர்களை எவ்வாறு தெரிவு செய்கின்ரீர்கள்.?

நிர்வாக குழுவை பொறுத்தவரை அதன் ஒருவருட பூர்த்தி காலம் முடிவடைந்தன் பிற்பாடு வருடாந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு அதிலிருந்து திறந்த அழைப்பு மூலம் விரும்பியவர்கள் உள்வாங்கப்படுவர். இந்நிர்வாக குழுவில் 25 பேர் அங்கம் வகிப்பர்.

அதேநேரம் எமக்கான 11 பேர் கொண்ட ஆலோசனை குழுவொன்றும் உள்ளது. மூன்று வருடத்திற்கும் மேலாக நிர்வாக குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர்கள் இதில் தெரிவு செய்யப்படுவர்.

 • எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து செல்கின்றீர்கள்..?

எமது செயற்பாடுகளை கத்தார், புத்தளம் என இரண்டாக பிரித்துள்ளோம். கத்தாரை பொறுத்தவரை, வேலை தேடி வருபவர்களுக்கான நேர்முக ஆலோசனைகள், பத்திரிகை விளம்பரங்கள், வேலை சிக்கல்கள் நிமித்தம் நாடு செல்ல நேரிடுபவர்களுக்கான பயணசீட்டு, விசா நிமித்தம் கோரப்படும் கோரிக்கைக்கான தவணை கடன் எனவும்,

புத்தளத்தை பொறுத்தவரையில், அங்குள்ள தேவைகளை எமக்கு வரையறை செய்யமுடியாது. இருந்தாலும் எமது இயலுமைக்கு ஏற்ப கல்வி, மருத்துவம், சுயதொழில், சமூகசார் தேவைகள் என முன்னெடுத்து செல்கின்றோம்.

 • புத்தளத்தில் தேவையுடையோர் எவ்வாறு அவர்களுடைய கோரிக்கைகளை உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.?

புத்தளத்தில் எமக்கான செயற்குழு ஒன்று உள்ளது. அதன் மூலமாக எமக்கான கோரிக்கைகள் கிடைக்கப்பெறும். அங்கு வரும் கோரிக்கைகள் தொடர்பில் உண்மை தன்மைகள், தேவையின் பெறுமதி என்பன தொடர்பில் விசாரித்து எமக்கு அறிக்கை அனுப்படும்.

 • புத்தளம் செயற்குழுவை பற்றி கொஞ்சம் அறியலாமா.?

முசம்மில் ஹாஜியார் புத்தளம் செயற்குழுவின் தலைவராக இருக்கிறார். சட்டத்தரணிகளான பஸ்லூர் ரஹ்மான், அஸ்ரக் ஆகியோர்களுடன் சகோ. ஆதிப், சகோ. ஹம்ஸா, சகோ. இர்ஷாத் உள்ளிட்டோர் சேவை செய்கின்றனர்.

 • புத்தளத்தில் நடைபெறும் PAQ நிகழ்வுகளுக்கு ஏன் அமைப்பின் அங்கத்தவர்களை அழைப்பதில்லை.?

விடுமுறைக்கு நாட்டுக்கு செல்பவர்கள் உரிய முறையில் தெரியப்படுத்தினால் அழைப்பதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது. அதேநேரம் எமது வீட்டுக்கு செல்வதற்கு, எம் வீட்டு நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு அழைப்பு தேவையில்லை. PAQ அமைப்பு – எமது அமைப்பு என்பதை உணர்ந்தாலே போதும்.

 • அமைப்பின் பொதுவான நிகழ்வுகளுக்கு செலவாகும் தொகை பற்றி.!

சந்தா தொகைகள் எக்காரணம் கொண்டும் ஏனைய தேவைகளுக்கு பயன்படுத்துவதில்லை. மாதாந்த கூட்டமாக இருக்கட்டும், வருடாந்த கூட்டமாக இருக்கட்டும், ஹஜ் பெருநாள் ஒன்றுகூடலாக இருக்கட்டும் எதுவாக இருந்தாலும் அதனுடைய செலவுகள் அனைத்தும் நிர்வாக குழு, ஆலோசனை குழு, நலன்விரும்பிகளின் உதவித்தொகை கொண்டே செய்யப்படுகின்றது.

 • புதியவர்களை எவ்வாறு உள்வாங்குகின்ரீர்கள்.?

புத்தளத்தவர்களை பொருத்தமட்டில் பொதுவாக எல்லோருக்கும் இவ்வமைப்பை பற்றி தெரியும். புதிதாக யாருக்கும் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அங்கிருந்து வருபவர்கள் யாரை சந்தித்தேனும் அவரை அறிமுகப்படுத்த இயலும். இல்லாவிட்டால் எந்த அறையில் தங்குகின்ராரோ அவர்கள் சார்ந்த யாரேனும் தெரியப்படுத்தும் விடத்து அவர்களை நாம் உள்வாங்க முடியும்.

 • புதிய செயற்றிட்டங்களை எவ்வாறு தெரிவு செய்கின்ரீர்கள்.?

தீர விசாரணைக்கு பின்னர் புத்தளம் செயற்குழுவிடமிருந்து கோரிக்கைகள் வந்து சேர்ந்தாலும் இங்குள்ள செயற்குழுவே மஷூரா அடிப்படையில் இறுதி முடிவை எடுக்கும். அனைத்து விடயங்களும் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்.

 • உங்களுடைய அமைப்பு நடுநிலைமையாக இயங்குகின்றதா.?

நீங்கள் கேட்கும் நடுநிலைமை என்னவென்று புரிகிறது, எந்தவொரு இயக்கமாக இருக்கட்டும், எந்தவொரு அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களாக இருக்கட்டும். PAQ அமைப்பிற்குள் வர நேர்ந்தால் அவை அனைத்தையும் தூரவிட்டு விட்டு தனிநபராகவே செயலாற்றுவார். அமைப்பும் அவ்வாறுதான் எல்லோரையும் சென்றடைகின்றது.

 • விளம்பரம் செய்யாது சமூக சேவை செய்ய இயலாதா.?

இது விளம்பரம் என்று சொல்லாது ஓர் ஆதாரம் என்று சொல்லலாம். ஒரு நம்பிக்கை அடிப்படையில் எமது சமூகத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே சந்தாக்கள் எம்மை வந்து சேருகின்றன. தருகின்ற சந்தாக்கள் எவ்வாறான முறையில் செலவழிக்க படுகின்றது என்பதை காட்டுவதற்கே புகைப்படங்கள் எடுக்கப்படுகிறது. இதன் ஊடாக தருகின்றவர்கள் இன்னும் இன்னும் அதிகமாக தருகிறார்கள், மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கின்றது.

 • மாணவர்களுக்கான ஏதாவது நலத்திட்டங்கள் செய்யப்படுகிறதா.?

க.பொ.த. சாதரனத்தரப்பரீட்சை, உயர்தர பரீட்சையில் சித்தியெய்த தவறிய வர்கள் தொழில்முறை கல்வியை தொடர முற்படும் போது அவர்களுக்கான உதவி தொகை வழங்கப்படுகிறது. இவர்களும் புத்தளம் செயற்குழு மூலம் நேர்முகப்பரீட்சை வைத்த பின்னரே உள்வாங்கப்படுகின்றனர்.

 • PAQ அமைப்பு பற்றிய ஒரு சிலரின் தவறான நிலைப்பாடு பற்றி.?

எந்த அமைப்பாக இருந்தாலும் இந்த எண்ணம் இருக்கத்தான் செய்யும். ஒரு சிலர் சரியான தகவல்கள் தெரியாமல் சொல்வது, வேண்டுமென்றே சொல்வது என பிரிக்க முடியும். புரிந்துணர்வை பொறுத்தே வேறுப்படுகின்றது. நிய்யத்து தூய்மையாக இருகின்றதால் அதை பற்றி கவலை பட வேண்டிய அவசியமில்லை.

 • எப்படி சந்தா தொகையை பெற்று கொள்கின்றீர்கள்.! சந்தாதாரர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா.?

எமது நிர்வாக அங்கத்தவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இதை சேகரிக்க தமது ஒய்வு நேரங்கள், பணங்களை செலவு செய்கின்றனர். அவர்களுடைய இருப்பிடங்களுக்கு சென்று எடுத்துவர வேண்டும்.

புத்தளத்தில் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து சென்றாலும் இங்கே எமது நிதி சேகரிப்பு குறைவாக இருந்தால் எம்மால் ஒன்றும் செய்ய இயலாது. நீங்கள் தருகின்ற அந்த சந்தா தான் எமது ஊரில் ஒருவருடைய நோயை குணப்படுத்துகின்றது, வறுமையை போக்க உதவுகின்றது என்பதை நாம் உணர வேண்டும். இறுதியாக நிறைய தாருங்கள், தொடர்ந்து தாருங்கள்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சுவடிக்கூடம்View All