Puttalam Online
regional-news

நுரைச்சோலை இக்ரா சர்வதேச ஆங்கில மொழி பாடசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டிகள்

  • 28 February 2018
  • 434 views

ரூஸி சனூன்  புத்தளம் 

கல்பிட்டி வீதி நுரைச்சோலை இக்ரா சர்வதேச ஆங்கில மொழி பாடசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டிகள் அண்மையில் நுரைச்சோலை அபூபக்கர் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

நுரைச்சோலை இக்ரா சர்வதேச ஆங்கில மொழி பாடசாலையின் பிரதி அதிபர் வினோத் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டியில் பாடசாலையின் சகல மாணவர்களும் பல்வேறுபட்ட குழு மற்றும் தனி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தனர்.
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குக்கான பரிசில்களை பிரதம அதிதியாக கலந்து கொண்ட அகில இலங்கை இக்ரா சர்வதேச ஆங்கில மொழி பாடசாலைகளின் பணிப்பாளர் ஹனா பாஸில் வழங்கி வைத்தார்.
கல்பிட்டி இக்ரா பாடசாலையின் அதிபர் பிரதீஸ் ராஜா, புத்தளம் இக்ரா பாடசாலையின் விளையாட்டு பொறுப்பாசிரியர் எம்.என்.எம். நவீத், வர்த்தக துறை ஆசிரியர் சியான் உள்ளிட்ட மற்றும் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All