Puttalam Online
regional-news

புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் 2018 ம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக்கூட்டம்

  • 4 March 2018
  • 414 views

ரூஸி சனூன்  புத்தளம் 
புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் 2018 ம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் சனிக்கிழமை (03) இரவு 7 மணிக்கு புத்தளம் போல்ஸ் வீதியில் அமைந்துள்ள தனியார் உணவு வீடுதியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் தலைவரும், புத்தளம் நகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளவருமான எம்.எஸ்.எம். ரபீக் தலைமையில் நடைபெற்ற இந்த வருடாந்த பொதுக்கூட்டத்தில், லீக்கில் அங்கத்துவம் வகிக்கின்ற விம்பிள்டன், லிவர்பூல், போல்டன், த்ரீ ஸ்டார்ஸ், ட்ரிபிள் செவன், நியூ ப்ரண்ட்ஸ், ஒடிடாஸ், யாழ் முஸ்லிம் யுனைடெட், பேர்ல்ஸ் ஆகிய 09 அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி தலா 03 பேர் வீதம் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை மற்றுமொரு கழகமான நியூ ஸ்டார்ஸ் அணி தமக்கு முக்கிய போட்டி ஒன்று இருப்பதால் கூட்டத்தில் கலந்து முடியாமல் போயுள்ளதாக எழுத்து மூலம் அறிவித்து கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் வழிகாட்டலின் கீழ் இந்த வருடாந்த பொதுக்கூட்டம் ஏற்பாடாகி இருந்தது.
2018 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படாததால் விண்ணப்பித்த அனைவரும் போட்டியின்றி புதிய நிர்வாக சபைக்கு உள்வாங்கப்பட்டனர்.
புதிய தலைவராக எம்.எஸ்.எம். ரபீக்கும் (த்ரீ ஸ்டார்ஸ்), செயலாளராக கலாநிதி எஸ்.ஆர்.எம். ஆஸாதும் (ஒடிடாஸ்), பொருளாளராக எம்.எஸ்.எம். ஜிப்ரியும் (நியூ ப்ரண்ட்ஸ்) மீண்டும் தெரிவாகினர்.
உதவி செயலாளராக எம்.டி.ரினாஸ் (த்ரீ ஸ்டார்ஸ்), உதவி பொருளாளராக சட்டத்தரணி ஏ.டபிள்யூ.எம். அஷ்ரக் (விம்பிள்டன்) ஆகியோரும் இதன்போது தெரிவாகினர்
இதேவேளை எஸ்.ஈ.எம். காசிம் (பேர்ல்ஸ்), ஏ.எம். அன்சார் (லிவர்பூல்), ஜெ.எம். முஸ்தாக் (ட்ரிபிள் செவன்), புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம். ஹிஷாம் (போல்டன்), லிப்டி ஜமால் (த்ரீ ஸ்டார்ஸ்) ஆகிய ஐவரும் உப தலைவர்களாக தெரிவாகினர்.
புதிய நிர்வாக சபையை பொறுப்பேற்று உரையாற்றிய தலைவர் எம்.எஸ்.எம். ரபீக்  தனதுரையில், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் வழிகாட்டலின் கீழ் நாம் புத்தளம் நகரத்தில் கால்பந்தாட்ட துறையை மேம்படுத்துவதில் பெரும் பங்காற்றி வருகின்றோம். அதில் முக்கியமாக இந்த வருட ப்ரிமியர் லீக் போட்டி தொடருக்கு விம்பிள்டன், லிவர்பூல் ஆகிய கழகங்களை உள்வாங்கியுள்ளோம். மூன்று கழகங்களை உள்வாங்குமாறு நாம் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதன் பேரில் நியூ ஸ்டார்ஸ் கழகமும் உள்வாங்கப்பட்டுள்ளமையிட்டு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்துக்கு நன்றி கூறுகிறோம் எனக்கூறினார்.
சகல கழகங்களுக்கும் இதன்போது தலா 5000 ரூபாய் ரொக்கப்பணம் வழங்கி வைக்கப்பட்டதோடு உதை பந்துகளும் வழங்கி வைக்கப்பட்டு இரா போசனத்தோடு கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All