Puttalam Online
regional-news

புத்தளம் மணல்தீவு சேகுவந்தீவு கிராமத்தின் திருவள்ளுவர் குருபூசை நிகழ்வுகள்

ரூஸி சனூன்  புத்தளம் 

புத்தளம் மணல்தீவு சேகுவந்தீவு கிராமத்தின் ஸ்ரீ முருகன் அறநெறிப்பாடசாலையில் திருவள்ளுவர் குருபூசை நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை  (04) அறநெறி பாடசாலையில் மிக சிறப்பாக நடைபெற்றது.

உலகப் பொது மறை எனப் போற்றப்படும் திருக்குறளை தந்து செந்தமிழ் மொழியாம் தமிழ் மொழிக்கு திருவள்ளுவர் பெருமான் ஆற்றிய சேவையை நினைவு கூரும் விதமாகவும் அறநெறி மாணவர்கள் அதனை அறிந்து கொள்வதற்காகவும், இந்துசமய கலாசார திணைக்களத்தின் ஆலோசனையின் பேரில் சேகுவந்தீவு ஸ்ரீ முருகன் அறநெறிப்பாடசாலை இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

பொறுப்பாசிரியர் த. நாகராஜா, ஆசிரியைகள் யோகராணி, ம. சிந்துஜா ஆகியோரின் தலைமையில் அறநெறிப்பாடசாலை உயர் பிரிவு மாணர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் திருவள்ளுவர் திருவுருவப் படம் அறநெறிப் பாடசாலை மாணர்களினால் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.

தொடர்ந்து பூஜை வழிபாடுகளும்  நடைபெற்றன. பூசைகளை மாணவர் சி.ஆகாஸ் நடாத்தி வைத்தார். தொடர்ந்து மாணவர்களின் திருவள்ளுவர் பற்றிய பேச்சுக்களும் திருக்குறள் பாவோதலும் இடம் பெற்றன.


One thought on “புத்தளம் மணல்தீவு சேகுவந்தீவு கிராமத்தின் திருவள்ளுவர் குருபூசை நிகழ்வுகள்

  1. Maxman says:

    தேங்க்ஸ் சோ மச்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All