Puttalam Online
other-news

முஸ்லிக்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பில் ஜெனிவாவில் அப்துர் ரஹ்மான்….

  • 6 March 2018
  • 239 views

முஸ்லிக்களுக்கெதிரான இனவாத வன்முறைகள் தொடர்பில் ஜெனிவாவில் அப்துர் ரஹ்மான் எடுத்துரைப்பு!

அறிக்கைகளையும் சமர்ப்பித்தார்!

(NFGG ஊடகப் பிரிவு)

நேற்று (5.3.2018, திங்கட்கிழமை) ஜெனீவாவில் பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்ட பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். ஐ.நா மனிதஉரிமைப் பேரவையின் 37வதுகூட்டத்தொடர் தற்போது ஜெனீவாவில்நடைபெற்று வருகின்றது. அதில்பங்கேற்பதற்காகவே NFGGயின்தவிசாளர் பொறியியலாளர்அப்துர்ரஹ்மான் நேற்று ஜெனீவாசென்றடைந்தார். ஜெனீவாவைதளமாகக் கொண்டியங்கும் மனிதஉரிமை மற்றும் சிறுபான்மைவிவகாரங்களுக்கு பொறுப்பான நிறுவனங்களுடனும்ராஜதந்திரிகளுடனும் இலங்கைநிலவரங்கள் தொடர்பில் அவர் சந்திப்புக்களை மேற்கொண்டார்.அத்தோடு “மத சுதந்திரமும் நாடுகளின்கடமையும்” என்ற தலைப்பில்இடம்பெற்ற சர்வதேச நாடுகளுக்கானஉப கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

திங்கட்கிழமை காலை ஜெனீவாநேரப்படி 9.30 மணிக்கு ஐ.நாவின்சிறுபான்மை மக்களுக்கான உரிமைபணிமனையில் முதலாவது சந்திப்பினை மேற்கொண்டார்.அதனைத் தொடர்நது OIC அமைப்பின்சிரேஸ்ட பிரதிநிதியையும் சந்தித்தார். அத்தோடு, மதரீதியான சிறுபான்மைமக்களின் விடயம் தொடர்பில் கவனம்செலுத்தும் சிரேஸ்டஇராஜதந்திரியான நொக்ஸ் தேம்ஸ்அவர்களுடனும் விசேட சந்திப்பினைமேற்கொண்டிருந்தார். இந்தசந்திப்புக்களின் போது இலங்கைமுஸ்லிம்களை இலக்கு வைத்து கடந்தசில வருடங்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாத தாக்குதல்கள்தொடர்பில் விரிவாக எடுத்துக்கூறியஅப்துர்ரஹ்மான் கடந்த சில நாட்களாகநடைபெற்று வருகின்ற சம்பவங்கள்தொடர்பிலும் விரிவாகஎடுத்துக்கூறினார்.

“அம்பாறையில் நடந்த இனவாததாக்குதல்கள் வேண்டுமென்றமுறையில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டஒன்றாகும். இதில் நூற்றுக்கணக்கான இனவாதிகள் நேரடியாக பங்கெடுத்துக்கொண்டதோடு, இத்தாக்குதல்கள்காரணமாக முஸ்லிம் வியாபாரஸ்தாபனங்களுக்கும், பள்ளி வாயலுக்கும் பெரும் சேதம்ஏற்பட்டுள்ளது. அத்தோடு 500 மீற்றர்தொலைவில் பொலீஸ் நிலையம்இருந்த போதிலும் இத்தாக்குதல்களை உடனடியாக கட்டுப்படுத்தவதற்குபோலிஸார் விரைந்துநடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மாத்திரமல்லாது,தாக்குதலில் ஈடுபட்டவர்களைஉடனடியாக கைது செய்யவும்தவறிவிட்டனர்.

மறுநாள் கைது செய்யப்பட்ட 5 நபர்கள் ICCPR சட்டத்தின்கீழ் குற்றப்பதிவுசெய்யப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். குறித்தICCPR சட்டத்தின் பிரகாரம் இந்தசந்தேக நபர்களுக்கு நீதி மன்றம்பிணை வழங்க முடியாது. இருப்பினும்மறுதினம் நீதி மன்றில் இந்த விடயம்எடுத்துக்கொள்ளப்பட்ட பொழுது,பொலீசார் ICCPR குற்றப்பத்திரிகையைவாபஸ் பெற்றுக்கொண்டு, அவர்களேசந்தேக நபர்களுக்கு பிணையினையும்பெற்றுக்கொடுத்துள்ளனர். இதுபோன்ற இனவாததாக்குதல்களின்போது, சட்டம்ஒழங்கை நிலைநாட்டவேண்டியவர்களே அதற்குஅனுசரணையாக நடந்துகொள்கின்றார்கள் என்பதுபொதுவான அவதானமாகும். இதனைநிரூபிக்கும் வகையிலேயே பொலீசார் அம்பாரை சம்பவத்திலும் நடந்துகொண்டுள்ளனர். இனவாதநடவடிக்கைகளைஇல்லாதொழிப்பதற்காகவே ICCPRஎனும் கடுமையான சட்டம்கொண்டுவரப்பட்டது. ஆனால் அதனைப்பாவித்துஇனவாதிகளின் நடவடிக்கைகளைகட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம்தொடர்ந்தும் தவறிவருகின்றது. அதன்விளைவாகவே அரசாங்கம் மாறியபின்னரும் கூட இந்த இனவாதநடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன” என்றும்தெரிவித்தார்.

அத்தோடு கண்டி-தெல்தெனிய மற்றும்திகண உட்பட்ட பிரதேசங்களில்நடந்து வரும் முஸ்லிம்களுக்குஎதிரான தாக்குதல்கள் தொடர்பிலும்எடுத்துக் கூறினார். தெல்தெனியபிரதேசத்தில் கடந்த சில தினங்களாகபதட்ட நிலை காணப்பட்ட போதிலும்வன்முறைகளை தடுப்பதற்கேற்றபோதுமான பாதுகாப்புக்களைஏற்படுத்த அரசாங்கம்தவறவிட்டிருக்கிறது. மேலும் பதட்டம்நிலவிய சூழ்நிலையிலும்வன்முறையாளர்கள் ஊர்வலமாகசெல்வதனை பொலிஸார்தடுக்கவில்லை. இதன்பின்னணியிலேயே தெல்தெனியமற்றும் திகன பிரதேசங்களில்இன்றைய மிக மோசமானவன்முறைகள் நடந்து முடிந்துள்ளன.இதில் முஸ்லிம்களின் வீடுகளும்வர்த்தக நிலையங்களும்பள்ளிவாயல்களும்தீக்கரையாக்கப்பட்டுள்ளன.முஸ்லிம்கள் பலரும்காயப்படுத்தப்பட்டுள்ளனர். இன்றுஏனைய இடங்களுக்கும் இது பரவலாம்என அஞ்சப்படுகின்றது” எனவும் தெரிவித்தார்.

அத்துடன் அம்பாறை வன்முறைகள்பற்றிய அறிக்கை ஒன்றினையும்சமர்ப்பித்தார். இவை தொடர்பாக தீவிரகவனம் செலுத்திய மனித உரிமைஅறிக்கையாளர், ஏனைய அதிகாரிகளும் இச்சம்பவங்கள் பற்றியஇன்னும் சில அறிக்கைகளையும்உடனடியாகத் தருமாறுகோரினார்.இலங்கையில் தொடரும்சம்பவங்கள் மிகவும் கவலைதருவதாகவும் இது தொடர்பில் உடனடிநடவடிக்கைகளை மேற்கொள்ளும்பொருட்டு இலங்கை அரசாங்கத்தின்கவனத்திற்கு இதனைக்கொண்டுவருவதாகவும், அதற்கான உரியஉயர்மட்ட அழுத்தங்களைகொடுக்கக்கூடிய உரியநடவடிக்கைகளைமேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

இதனைத்தொடர்ந்து கண்டிதெல்தெனிய திகன பகுதிகளில்இன்று நடைபெற்ற வன்முறைகள்தொடர்பான புகைப்படங்கள் அடங்கியஆவணங்களும்குறித்த அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த சந்திப்புகளில் , மனித உரிமை செயற்பாட்டாளர் முயீஸ் வஹாப்தீன் அவர்களும் , NFGG செயற்குழு உறிப்பனர் இஸ்ஸதீன் அவர்களும் கலந்து கொண்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All