Puttalam Online
regional-news

புத்தளம் நகரில் பசியினை தீர்க்கும் அமைப்பொன்று உதயம்

ரூஸி சனூன்  புத்தளம் 

புத்தளம் நகரில் மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் மக்களின் பசியினை தீர்க்கும் பொருட்டு மாணவர் பராயத்தினரை உள்ளடக்கிய புதிய சமூக சேவை அமைப்பொன்று உதயமாகியுள்ளது.

இந்த பசி போக்கும் திட்டத்தினை முன்னெடுத்து செல்ல 20 மாணவர்களை உள்ளடக்கிய “உதவும் சிறகுகள்” (ஹெல்பிங் விங்ஸ்) எனும் பெயரில் இந்த அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
எம்.என்.எம். அஸ்னியை தலைவராக கொண்ட இந்த அமைப்பானது புத்தளம் நியூ செட்லிமெண்ட் வீதியில் அமைந்துள்ள காரியாலயத்தை மையப்படுத்தி செயல்படுகிறது.
இந்த அமைப்பின் ஆரம்ப கட்ட செயற்பாடாக பிரதி வெள்ளிக்கிழமை தோறும் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற 20 பேரும் தலா ஒவ்வொரு பகல் போசன பொதிகளை ஒன்று சேர்த்து பசியினால் அவதியுறும் 10 குடும்பங்களை இணங்கண்டு ஒரு குடும்பத்துக்கு தலா இரு பகல் போசன பொதிகளை விநியோகம் செய்கின்றனர்.
இந்த ஆரம்ப கட்ட செயற்பாட்டின் மூலமாக 10 குடும்பத்தினர் உணவு உண்டு பசியாறுவதாக தெரிவித்த அமைப்பின் தலைவர் எம்.என்.எம். அஸ்னி, எதிர்காலத்தில் பலரும் எம்மோடு இணையுமிடத்து புத்தளம் நகரில் பசியினால் அவதியுறும் ஏழை மக்களின் வாழ்வில் ஒளி ஏற்ற முடியும் எனவும் தெரிவித்தார்.


2 thoughts on “புத்தளம் நகரில் பசியினை தீர்க்கும் அமைப்பொன்று உதயம்

  1. ரஷீல் சாய்ஸ்:, தங்க யு போர் திஸ் போஸ்ட். இட்ஸ் வெரி இன்ஸ்பிரிங்.டிப்ளமோ ஒன்லைன்

  2. Razeel says:

    Plz tell ur phone number

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All