Puttalam Online
current

புத்தளம் பெரிய பள்ளி நிர்வாகம் வேண்டுகோள்

  • 8 March 2018
  • 275 views

ரூஸி சனூன்  புத்தளம் 
தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிலை காரணமாக பொது மக்கள் மிக நிதானமாக நடந்து கொள்ளுமாறு புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பள்ளி நிர்வாகம் பொது மக்களை கேட்டுள்ளது.
புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பள்ளி நிர்வாகம் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
தற்போது அவசரகால சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்ட செயலாளர் செயலகத்தில் பாதுகாப்பு தொடர்பான உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பல்வேறு  முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம் பொது மக்கள் ஆங்காங்கே கூடி நின்று பேசுவது, ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை பள்ளிகளை ஆர்ப்பாட்டங்களுக்கு பாவிப்பதை முற்றாக தவிர்ப்பதோடு விடுமுறையை கழிப்பதற்காக ஆற்றுக்கு சென்று தங்கி நிற்பதை தவிர்ந்து கொள்ளுமாறும்  கேட்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு புத்தளம் பெரிய பள்ளியுடன் 0322267451 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All