Puttalam Online
regional-news

புத்தளம் ஸ்ரீ ராகுல முன்பள்ளியின் திறப்பு விழா நிகழ்வு

  • 8 March 2018
  • 147 views

ரூஸி சனூன்  புத்தளம் 
சமூகத்தில் காணப்படுகின்ற பல்வேறு தேவைகள் இனங்காணப்பட்டு அவைகளை தீர்த்து வைக்கின்ற பணியில் கூட்டுறவு சங்கங்கள் பெரிதும் பங்காற்றி வருவதாக வடமேல் மாகாண கூட்டுறவு, விளையாட்டு துறை, வீடமைப்பு மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பியசிறி ராமநாயக்க தெரிவித்தார்.
புத்தளம் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினால் புத்தளம் ஸ்ரீ விசுத்தாராம பௌத்த விகாரைக்கு சொந்தமான கட்டடத்தில் புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்ட ஸ்ரீ ராகுல முன்பள்ளியின் திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வானது திங்கட்கிழமை (05) முற்பகல் நடைபெற்றது. முதல்நாளில் 25 மாணவர்கள் இந்த முன்பள்ளிக்கு புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டனர். புதிய ஆசிரியையாக நிலங்கா தில்ருக்ஷி நியமிக்கப்பட்டுள்ளார். பிள்ளைகளிடம் எவ்வித கட்டணமும் அறவிடப்படாமல் புத்தளம் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினால் முற்று முழுதாக இலவசமாக இந்த முன்பள்ளி நடாத்தப்படவுள்ளது.
அமைச்சர் பியசிறி ராமநாயக்க அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
வடமேல் மாகாணத்தில் காணப்படும் 33 கூட்டுறவு சங்கங்களில் இவ்வகையான முன்பள்ளிகள் ஆரம்பித்து வைக்கப்படுவதானது அதன் வெற்றியை கோடிட்டு காட்டுகின்றது.
பெற்றார்கள் தமது பிள்ளைகள் மீது அதிக கரிசனை காட்ட வேண்டிய காலத்தில் நாம் இருந்து கொண்டுள்ளோம். பெற்றார்கள் கண்காணிப்பில் இருந்து பிள்ளைகள் தூர போகும்போதுதான் அந்த பிள்ளைகள் காமுகர்களின் பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாகின்றனர்.
பிள்ளைகள் நன்கு கல்வி பயின்று நாட்டுக்கு ஏற்ற நற்பிரஜைகளாக உருவாக வேண்டுமென்றால் நல்ல கல்வி சிந்தனையுள்ள சூழல் உருவாக்கப்படவேண்டும். பெற்றார்ளுக்கு இது பற்றிய தெளிவினை வழங்குவோமென்றால் அத்தகைய சூழலை இலகுவில் உருவாக்க முடியும் எனக்கூறினார்.
இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை சபாநாயகர் சிந்தக அமல் மாயாதுன்ன, வடமேல் மாகாண சபை உறுப்பினர் கிக்ஸ்லி லால், புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.என். சித்ரானந்தா, ஸ்ரீ விசுத்தாராம பௌத்த விகாரையின் விகாராதிபதி பலகொல்லாகம சாகர பஞ்யா தேரர், புத்தளம் நகர முன்பிள்ளை பருவ அபிவிருத்தி மன்றத்தின் பொறுப்பதிகாரி ரூபிகா, புத்தளம் பலநோக்கு கூட்டுறவு சங்கதலைவர் எல்.எஸ். சிந்தக உள்ளிட்ட  அதன் அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All