Puttalam Online
chikva

குறை கண்:19 வெட்டுக்குளத்தின் துர்நாற்றத்திற்கு பதில் கூறப்போவது யார்.?

  • 11 March 2018
  • 1,189 views

(வசீம் ஏ. பசீர்)

நகரின் மத்தியில் பாரம்பரியமாக இருந்து வரும் கந்தக குளமாம் வெட்டுக்குளத்தின் அண்மைய நிலைப்பாடுகள் சூழவுள்ளவர்களை, அவ்வழியால் போவோர் வருவோரை முகம் சுழிக்க வைக்கின்றது.

கடந்த காலங்களில் இந்த குளத்தின் பாரம்பரியம் தொடர்பிலும், அழகு தொடர்பிலும் பரவலாக கதைக்கப்பட்ட நிலையில் சகோ. சியாத் மற்றும் குழுவினரின் முயற்சியின் பயனாக வெட்டுக்குளத்தின் அழகு ரம்மியமானது. அதனை சூழ மரங்கள், பூச்செடிகள், மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு பாரம்பரியத்திற்கு புத்துணர்வு ஊட்டப்பட்டமை யாவரும் அறிவோம்.

ஆனால் அத்தனை முயற்சிகளும் ஏளனப்படுத்தப்பட்டுள்ளமை கவலைக்குரியதாகும். கந்தகத்தால் சூழப்பட்ட வெட்டுக்குளம் என்பதற்கு அப்பால் கான்களால் சூழப்பட்ட குளமாய் மாறி துர்நாற்றத்தால் அழுது வடிக்கிறது.

இவ்வாறாக கான்களில் இருந்து வரும் கழிவு நீர் தேங்கி நின்று ஒரு வித படிவமாய் குளத்தில் மிதக்கிறது. அது வெயிலில் காய்ந்து காய்ந்து ஒரு வித தீய வாடையை வெளியேற்றுகிறது.

மூக்கை மூடிய வண்ணமே அவ்விடத்தின் ஊடாக நகர வேண்டி இருக்கிறது, வாழ வேண்டி இருக்கிறது. ஊரின் நடுவில் கம்பீரமாக காட்சியளிக்கும் வெட்டுக்குளத்தின் இவ் துர்நாற்றத்தை இல்லாமலாக்கி அதன் பாரம்பரியம் தொடர்பில், அழகு தொடர்பில் கரிசனை காட்டுவது யார்.? சூழவுள்ள குடியிருப்பாளர்களா.? நகரசபை நிர்வாகிகளா.? சமூக ஆர்வலர்களா.?

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All