Puttalam Online
other-news

மக்களின் மனங்களை புன்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு எதனையும் பெற்றுக் கொடுக்க முடியாது.நல்லதை பாராட்ட பழக வேண்டும்

  • 12 March 2018
  • 122 views

–    தேமான்ய அல்ஹாஜ்.இர்ஷாத் றஹ்மத்துல்லா –

இலங்கையின் அண்மைய முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவத்தின் உண்மைத்தன்மை

தொடர்பில் அரச தலைவர்கள் முதல் பெரும்பான்மை மத தலைவர்களுக்கு உரிய

முறையில் எடுத்து சொல்லப்படவில்லை என்கின்ற ஒரு குற்றச்சாட்டு பல

தரப்புக்களில் இருந்தும் அவ்வப்போது முக் வைக்கப்பட்டுவருகின்றதை

காணமுடிகின்றது.குறிப்பாக அரசியல் வாதிகள் கூட தமது

இருப்புக்களுக்கும்,மக்கள் மத்தியில் ஞனரஞ்சக புகழை ஈட்டிக்கொள்ளும் ஒரு

தந்திரமாக இதனை தான் சார்ந்தவர்களை கொண்டு வெளிப்படுத்திவருகின்றனர்.

குறிப்பாக அரசியல் எதிராளிகள் என்பவர்கள் இது தொடர்பில் முக நுால்களின்

பக்கங்களிலும்,சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.வந்து

முள்ளனர்.

இவர்கள் வெறுமனே சமூக வலைத்தளங்களில் தமது காமண்டஸ்களாக பதிவிடுவதை

மட்டும் செய்கின்றார்களேயன்றி எந்த வித ஆக்க பூர்வமான பணிகளையும்

செய்ததாக காணமுடிவதில்லை.குறிப்பாக அம்பாறை மற்றும் கண்டி சம்பவங்கள்

தொடர்பில் எமது முஸ்லிம் அரசியல் தலைமைகளை எடுத்த முயற்சிகள் என்பது

இறைவனின் புரத்தில் இருந்து கிடைக்கும் நன்மைக்காகவே பிரார்த்திக்க

வேண்டுமே தவிர அவர்களின் பணிகளை கொச்சைப்படுத்தி அவர்களது மன

வேதனையினை யாரும் சம்பாதிக்க முனையாதீர்கள் என்ற அன்பான வேண்டுகோளை

முன் வைக்கின்றேன்.அந்த வரிசையில் அது அமைச்சர்களான ஹலீம்,ரவூப்

ஹக்கீம்,றிசாத் பதியுதீன்,கபீர் ஹாசிம் உள்ளிட்ட அமைச்சர்களாக இருந்தால்

என்ன,பாராளுமன்றத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களாக

இருந்தால் என்ன அதற்கு அப்பால் அரசியலில் இருக்கும்,மாகாண சபை

உறுப்பினர்களாக இருந்தாலும் சரி அவர்களது அவர்களது அளவுக்கு இந்த

சமூகத்தின் பாதுகாப்பு தொடர்பில் எடுத்த நடவடிக்கைகள் அபரிமிதம்.இதை

அறியாத எப்போதும்,அபாண்டங்களை சுமத்தும் சிலரது செயற்பாடுகள் இவர்களது

பெருமதியினை மழுங்கடிக்கச் செய்வதுடன்,எதிராளிகளுக்கும் இந்த

செயற்பாடுகள் சிம்ம சொற்பனமாக மாறிவிடும் என்பதையும் நினைவுபடுத்துவது

பொருத்தமாகும்.இன்று எம்மில் சிலர் எவர் எதை செய்தாலும் அதில் திருப்தி

காணுவதுமில்லை.செய்கின்றவர்களுக்கு பெரும் தடைகளாகவே இருந்து

வருகின்றனர்.

அம்பாறை சம்பவத்தின் போதும் இதனுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட

வேண்டும் என்று முயற்சிகளை செய்த அரசியல் வாதிகளை பொறுப்பற்ற முறையில்

விமர்சித்தும்,அவர்களது பணிகளை பின்னடைவு செய்யும் மோசமான வசனங்களை

வெளியிட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்,சொத்துக்களை ,உயிர்களை

பறிகொடுத்தவர்களின் வேதனைகைள மலினப்படுத்தும் சிலர் தொடர்ச்சியாக எமது

சமூகத்தில் தலைதுாக்கி தாண்டவமாடும் வேலைகள் என்பது சமூகத்தினால்

அங்கீகரிக்கப்பட கூடாது,தானும் செய்வதில்லை செய்கின்ற அரசயில்

தலைமைகளையும் செய்ய விடாது தனிப்பட்ட அரசியல்,மற்றும் பிரபலத்துக்காக

ஒவ்வாத கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வது

மடடைமத்தனமாகும்.

களத்தில் நிலவரம் அதற்கு அரசியல் தலைமைகள் கொடுக்கும் பெறுமானம்

என்பவைகளை  நிறுத்து பார்த்து அதில் குறைகள் இருந்தால் ,அதனை மிகவும்

அழகிய பண்புடன் எடுத்துச் சொல்வதைவிடுத்து,அதற்கு மாற்றமாக அவர்களை

அவமானம் செய்யும் கருத்துக்களை பதிவேற்றியதும்,சமூகத்தின் ஒரு பெரியவராக

மாறிய மமதையில் சிலர் செய்யும் வேடிக்கைகள் இவர்களது வாழ்வில் ஏற்படும்

சோதனைகளின் போது இந்த வலியின் ஆழத்தை புரிந்து  கொள்வார்கள்.இந்த நிலை

எவருக்கும் ஏற்படக் கூடாது என்ற பிரார்த்தணையினை செய்கின்றேன்.

குறிப்பாக கண்டி சம்வத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எமது

சமூகத்தின் தலைமைகள் மேற்கொண்ட முயற்சகிகளை என்பது இந்த நாட்டில் 1990

களில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது கூட மேற்கொள்ள முடியாததை விட

மிகவும் கடும் போக்குடன் அல்லாஹ்வுக்காக,நேரகாலமின்றி

தலைக்குத்தும்,காய்ச்சலுக்கும் தனக்கு வந்தால் தான் அதனது வலிகள்

தெரியும் எனபதை அனுபவித்த நிலையில் நோய்க்காண நிவாரணத்தை தேடும்

வழிகளில் ஒவ்வாரு அரசியல் தலைவர்களும் செயற்பட்டதின் விளைவும்,அவர்களது

அனுகுமுறைகளும் அல்லாஹ் எம்மை பாதுகாத்துள்ளான என்பதை மனதில்

எல்லோரும் இருத்திக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

நாம் வாழுகின்ற நாட்டின் இனப்பரம்பல் என்பது பெரும்பான்மை சமூகத்தினை

அதிக கொண்ட நாடு.இருந்த போதும்,அதற்காக வேண்டி இனவாதிகளுக்கு கூஜா

துாக்கிகளாக எமது மக்களும்,அரசியல் தலைமைகளும் இருக்க வேண்டும் என்பது

அர்த்தமல்ல,சரியான நேரத்தில் சமூகத்தின் தேவை தொடர்பில் தட்டிக்கேட்க

வேண்டும் என்பது உறுதி,கடந்த ஆட்சியாளர்கள்  அளுத்கமையில் செய்தது

நியாாயப்படுத்தி இந்த அரசு கண்டியில் செய்ததையும் சரி என்று கூற முற்படவில்லை.

அப்போது அந்த பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராக கடும்

நடவடிக்கையெடுக்க முடியாத நிலையில் ஆட்சியாளர்கள் இருந்தார்கள்.இதனால்

எமது தலைமைகள் அவர்களுடன் முட்டி மோதி சிலதை மட்டுமே பெற முடிந்ததது.

இதன் பிற்பாட்டினால் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அவர்களை சிந்திக்க துாண்டியது.

இருந்த போதும்,அவர்களது செய்றபாடுகள் திறைமறைவில் இன்னும்

இனவாதத்தின் சாயல் ஊடுருவியுள்ளதை இந்த கண்டி மற்றும் அம்பாறை

சமபவங்களில் கண்டறிந்து கொள்ள முடிந்தது.நல்லாட்சி அரசு  தொடர்பில் பல

இணக்கமற்ற உடன்பாடுகள் இருந்தால் இந்த தருணம் என்பது எமது மக்களின்

பாதுகாப்பு தொடர்பில் மிகவும் கவனமாக காய் நகர்த்தல்களை செய்ய வேண்டியுள்ள

நிலையில் அதனை எமது முஸ்லிம் அரசியல் தலைமைகள் மிகவும்

பக்குவமாக பல முனைகளில் இருந்து செய்துவருவதை காணமுடிகின்றது.

தமது தனிப்பட்ட நிரல்களுக்கு அப்பால் சமூகம் என்கின்ற சிந்தணை மற்றும்

எமது பிறந்த நாடு அது பாதுகாக்கப்பட வேண்டும் என்று உணர்வுடனும்,சிந்தணையுடனும்

ஒற்றுமையாக அனுபவம் கூறும் ஆற்றல்கள்

என்பனவற்றை மையப்படுத்தி இந்த பிரச்சினையினை முடிவுக்கு கொண்டுவந்து,

எதிர்காலத்தில் இவ்வாறானதொரு சம்பவம் இடம் பெறாமல் இருக்க

சட்டத்தின் மூலம் சாதிக்க கூடியவற்றை செய்யும் முயற்சியில் எமது தலைமைகள்

முன்னேறிக் கொண்டிருக்கின்ற இப்படியானதொரு நேரத்தில் அவர்களது

பாதுகாப்பினை அல்லாஹ் வழங்க வேண்டும் என்ற பிரார்த்தணையினை

செய்வதுடன்,வெந்துப் போயுள்ள எமது சமூகத்திற்கு அல்லாஹ் மன ஆறுதலையும்,

இஸ்லாமியன் என்றதால் ஏற்பட்ட அழிவுகளுக்கு அல்லாஹ்வின் உயர்

அருளும்,அவனது அருட் கொடைகளும் இன்ஷா அல்லாஹ் இவனது நாட்டத்தின் படி

கிடைக்க வேண்டிய இடத்தில் அது கிடைக்கும் என்ற இஹ்லாசுடன்  நாம்

பயணிப்போம்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All