தேசிய பாட­சா­லை­களில் 10 ஆண்­டு­க­ளுக்கு  அதி­க­மாக ஒரே பாட­சா­லையில் 6 ஆம் தரம் முதல் 11 தரம் வரை­யான வகுப்­பு­க­ளுக்கு கல்வி கற்­பிக்கும் ஆசி­ரி­யர்கள் 5473 பேருக்கு  இம்­மாத இறு­திக்குள்  இட­மாற்றம் வழங்க கல்வி அமைச்சு தீர்­மா­னித்­துள்­ளது.

தேசிய பாட­சா­லை­களில் 10 ஆண்­டு­க­ளுக்கு மேலாக ஒரே பாட­சா­லையில் கல்­வி­கற்­பிக்கும் ஆசி­ரி­யர்­க­ளுக்­கான இட­மாற்ற வேலைத்­திட்டம் மூன்று கட்­டங்­களின் கீழ் செயற்­ப­டுத்­த­ப்பட்டு வரு­கின்­றன.  இதன் முதற் கட்டம் கடந்த வருட இறு­திப்­ப­கு­தியில் இடம்­பெற்­றது. இதில் உயர்­தர வகுப்பு ஆசி­ரி­யர்கள் 2590 பேர்  ஏற்­க­னவே  இட­மாற்றம் செய்­யப்­பட்­டனர்.

இரண்டாம் கட்­டத்தில்    முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரை ஒரே பாட­சா­லையில் 10 ஆண்­டு­க­ளுக்கு மேலாக சேவையாற்றும் ஆசி­ரி­யர்கள் 1441 பேரில், 760 பேருக்கு இடமாற்றம் வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

virakesary