Puttalam Online
regional-news

மதீனா ஹோட்டலுக்கு தீ வைத்த மூவருக்கு விளக்கமறியல்

  • 14 March 2018
  • 165 views

ஆனமடுவ நகரில் காணப்பட்ட ஒரேயொரு முஸ்லிம் ஹோட்டலான மதீனா ஹோட்டலினை தீ வைத்துக்கொளுத்தியமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருந்த 3 சந்தேகநபர்களை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனமடுவவில் கடந்த 10 ஆம் திகதி மதீனா ஹோட்டல் இனவாதிகளால் தீ வைத்துக்கொளுத்தப்பட்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பில், பாடசாலை மாணவர்  உள்ளிட்ட 16 வயதுடைய மற்றும் 23 வயதுடைய சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All