Puttalam Online
regional-news

குருனாகல் லனீஸா ராத்தா காலமானார்

  • 14 March 2018
  • 716 views

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…

குருனாகலைச் சேர்ந்த லனீஸா உவைஸ்  அவர்கள் இன்று கொழும்பில்  வபாத்தானார்கள்.

அன்னார் புத்தளத்தைச் சேர்ந்த காலம்சென்ற தாஹிர் புரக்டர் அவர்களின் மூத்த மகளும், ரிஸ்னி, ஷான் மற்றும் ஜாகிர் ஆகியோரின் அன்புத் தாயுமாவார்.

ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (14-03-2018) வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு கொழும்பில் இடம்பெறும்.


 தாஹிர் புரொக்டர் 

புத்தளத்தில் இஸ்மாயில் ஐயா அவர்களைத் தொடர்ந்து சட்டத்தரணியாக வந்தவர் அல்ஹாஜ் எம் ஓ எம் தாஹிர் ஹாஜியாராவார்.இவருடைய தந்தையார் எம் எம் எம் ஒமர் அவர்களாவர். தாஹிர் புரொக்டர் அவர்கள் சட்டத்தரணித் தொழிலை குருநாகல் நீதிமன்றத்தில் ஆரம்பித்து அப் பகுதி மக்களிடையே பிரசித்தமும் பெற்றவராகத் திகழ்ந்தார். குருநாகல் பகுதி காதியாராகவும் முடிக்குரிய சட்டத்தரணியாகவும் பணியாற்றியுள்ளார்.

குருநாகல் தெலியாகொன்னயில் பிரசித்திபெற்றிருந்த முகாந்திரம் ஆராச்சியார் ஹமீது ஹுசைன் அவர்களின் மகளைத் திருமணம் செய்ததன் மூலம் குருநாகல் நகரிலேயே வாழ்ந்து வந்தார். எனினும் தனது உறவினர் நண்பர்களுடனும் மட்டுமன்றி நமது ஊராருடனும் நெருக்கமான பிணைப்பினை ஏற்படுத்தி இருந்தார். புத்தளம் மக்களின் அபிமானத்தினையும் கெளரவத்தினையும் பெற்றதோடு அவர்களின் சுக துக்கங்களில் தவறாது பங்குகொண்டு அவர்களுக்குத் தன்னால் முடியுமான உதவிகளை செய்துவந்தார்.

அக்காலத்தில் புத்தளத்தில் விஷேட மருத்துவ வசதிகள் குறைவாகவே இருந்தன.அப்போது எம்மவர்கள் சிகிச்சைகளுக்காக நம்பிக்கையுடன் சென்ற இடம் குருநாகல் ஆகும். காரணம் அல்ஹாஜ் தாஹிர் அவர்கள் புத்தளம் பகுதியின் பிரதிநிதிபோல் அங்கு வதிந்தமையாகும்.

நோயாளிகளை வரவேற்று அவர்களுக்குரிய மருத்துவரிடம் அழைத்துச்சென்று உரிய சிகிச்சைகளுக்கு உதவியதுடன் அவர்களையும் உடன் வருவோரையும் தமது இல்லத்திலேயே அவர்களைத் தங்கவைத்து உணவுகளையும் பரிமாறிப் பராமரித்தார். இதற்காக தனது வீட்டில் \\\’புத்தளம் ஹோல் \\\’ என ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. சாதி மதம் பாராது இறுதிவரை விருப்பத்துடன் இவர் இப்பணியை ஆற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

அன்னாருக்குப் பின்னர் அவரின் புதல்வர் மர்சூக் அவர்கள் இப்பணியைத் தொடர்ந்து செய்தாராயினும் இளவயதிலேயே அவர் காலஞ் சென்றுவிட்டார். அவர்களுக்குப் பின்னர் தாஹிர் புரொக்டர் அவர்களின் மூத்த மகள் லனீசா உவைஸ் அவர்கள் இதனை முன்னெடுத்தது மட்டுமன்றி இன்றும் கூட புத்தளம் மக்களின் நன்மதிப்பைப் பெற்று எம்மவரின் உள்ளத்தில் இடம்பிடித்திருப்பது நாம் அறிந்ததாகும்.

நன்றி: கலாபூஷணம் தாஜுல் அதீப் அல்ஹாஜ் ANM ஷாஜஹான், லனீஸா உவைஸ்
(Z.A. Zanhir)

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All