Puttalam Online
regional-news

புத்தளம் தில்லையடியில் “தனபாக்கியம் அற நிதியம்” அமைப்பு உதயம்

  • 15 March 2018
  • 242 views

ரூஸி சனூன்  புத்தளம் 

புத்தளம் தில்லையடியில் நீண்ட காலம் சமய, சமூக விழுமியங்களுக்காக அயராதுழைத்து அமரத்துவம் அடைந்த தனபாக்கியம் அவர்களின் பெயரில் “தனபாக்கியம் அற நிதியம்” என்கின்ற புதிய அமைப்பொன்று உதயமாகியுள்ளது.

அன்னார் முன்னெடுத்த சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லும் நோக்கில் இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக அதன் ஸ்தாபகர் எஸ். பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஸ்தாபகர் எஸ். பாலகிருஷ்ணன் தலைமையில் அண்மையில் தில்லையடியில் நடைபெற்ற இதன் முதலாவது அங்குராப்பண கூட்டத்தின் போது தலைவராக ஜீ. ஞான சேகரனும், இணை தலைவர்களாக எம். மோகன் முருகன், எஸ்.சுரேஷ், எஸ். தினேஷ் ஆகியோரும், செயலாளராக பீ.டி. மஹிந்த பாலனாத்தும், உப செயலாளராக பீ.சி. பிரசன்னாவும், பொருளாளராக பீ. மஹிந்த ரூபனும், உப பொருளாளராக எம்.ஜே. சுரேசும், ஆலோசகராக டி.சி. லக்ஷ்மனும், போஷகராக பீ.என். மதுசங்கரும் தெரிவாகினர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All