Puttalam Online
other-news

விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு

  • 16 March 2018
  • 116 views

(அகமட் எஸ். முகைடீன்)
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸின் முயற்சியினால் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி கிரிக்கெட் பாடசாலையாக விளையாட்டுத்துறை அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டு அதற்கான கடின பந்து விளையாட்டு உபகரணங்களும் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உhகரணங்களும் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (16) வெள்ளிக்கிழமை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் ஏ.சி.ஏ.எம். இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து விளையாட்டு உபகரணங்களை வழங்கிவைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான எம்.ஐ.எம். மன்சூர், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம், கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. சபூர்த்தம்பி, சம்மாந்துறை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல். சபூர்தீன், கவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, கல்லூரியின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
விளையாட்டுத்துறை அமைச்சினால் 200 பாடசாலைகள் கிரிக்கெட் பாடசாலைகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியும் பிரதி அமைச்சர் ஹரீஸினால் உள்வாங்கப்பட்டு பாடசாலை மாணவர்கள் கடின பந்து கிறிக்கெட் பயிற்சியினை மேற்கொள்வதற்கு ஏதுவாக சிரேஸ்ட மற்றும் கனிஷ்ட பிரிவு விளையாட்டு கழகங்களுக்கான கடின பந்து விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டதோடு சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

போதை

  • Wednesday,11 Jul 2018
சுவடிக்கூடம்View All