Puttalam Online
regional-news

புத்தளம் லிவர்பூல் அணி 02 : 01 கோல்களினால் வெற்றி

  • 18 March 2018
  • 588 views

ரூஸி சனூன்  புத்தளம் 
புத்தளம் லிவர்பூல் மற்றும் புத்தளம் விம்பிள்டன் அணிகளுக்கிடையில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் புத்தளம் லிவர்பூல் அணி 02 : 01 கோல்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்டு வரும் முதல் சுற்றுக்கான பிரிமியர் லீக் பிரிவு 02 க்கான கால்பந்தாட்ட தொடருக்கான போட்டி ஒன்றிலேயே லிவர்பூல் அணி இந்த வெற்றிதனை அடைந்துள்ளது.
இந்த போட்டியானது சனிக்கிழமை (17) மாலை புத்தளம் தில்லையடி முஸ்லிம் மஹா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
போட்டி ஆரம்பித்து முதல் பாதியில் லிவர்பூல் அணி முதலாவது கோலினை பெற்றது. எனினும் விம்பிள்டன் அணிக்கு கிடைக்கப்பெற்ற பெனால்டி உதை ஒன்று கோலாக்கப்பட்டதால் முதல் பாதியில் கோல் நிலைமை தலா ஒவ்வொன்றாக காணப்பட்டது.
இடைவேளைக்கு பின்னரான இரண்டாவது பாதியில் இரு அணிகளும் விட்டுக்கொடுக்காமல் ஆடிய போதிலும் லிவர்பூலுக்கு கிடைக்கப்பெற்ற பெனால்டி உதை கோலாக்கப்பட்டதால் நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் லிவர்பூல் அணி  02 : 01 கோல்களினால் வெற்றி பெற்றது.
லிவர்பூல் அணிக்காக எச்.ஹம்ருசைன், எம்.தஸ்லீம் ஆகியோரும், விம்பிள்டன் அணிக்காக எம்.என். எம். நஜாத்தும் கோல்களை பெற்றுக்கொடுத்தனர்.
போட்டிக்கு நடுவர்களாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன மத்தியஸ்தர் சங்க அங்கத்தவர்களான பீ.என்.எம். சுரேஷ், எஸ்.பீ.எஸ். சில்வா, உபுல் லக்மால் ஆகியோர் கடமையாற்றினர்.
குறித்த இந்த போட்டி தொடரின் குழு 12 இல் புத்தளம் லிவர்பூல் மற்றும் புத்தளம் விம்பிள்டன் அணிகளோடு வென்னப்புவ ப்ராவ் ஹார்ட், கொட்டராமுல்ல அல் ஹிரா ஆகிய அணிகளும் உள்வாங்கப்பட்டுள்ளன. இந்த நான்கு அணிகளும் புள்ளிகள் அடிப்படையில் முதல் சுற்றில் போட்டியிட உள்ளன.
 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All