Puttalam Online
current

புத்தளம் நகரசபை தலைவராக மீண்டும் கே.ஏ. பாயிஸ் தெரிவு

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வட்டார ரீதியாக வென்ற மற்றும் போனஸ் ஆசனம் மூலம் தெரிவான வேட்பாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய புத்தளம் நகர சபை அமர்வு இன்று (27-03-2018) கூடியது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினர் அமீன் சபையில் நடுநிலை வகிப்பதாக அறிவிக்க ஏனைய நகரசபை உறுப்பினர்களிடையே இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் 11 வாக்குகளை பெற்று கே.ஏ. பாயிஸ் புதிய நகரசபை தலைவராக தெரிவானார்.

உப தலைவருக்கான வாக்கெடுப்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த புஷ்ப குமார தெரிவானார்.

ஊரின் புதிய நகரசபை தலைவருக்கு புத்தளம் ஒன்லைன் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றது.

WAK


3 thoughts on “புத்தளம் நகரசபை தலைவராக மீண்டும் கே.ஏ. பாயிஸ் தெரிவு

  1. Mohamed SR Nisthar says:

    “உங்கள் மயில்,…”

    எங்காவது, எப்போதாவது மயில் கட்சிக்கு பிரச்சரம் செய்தேனா? இந்த மரம், மயில், மயிர் கட்சிகள் வேண்டாம் என்று தானே சொல்லிக் கொண்டிருக்கின்றேன்.
    இந்த கட்சிகளை அடித்து துரத்தாதவரை இலங்கை முஸ்லீம்கள் அடிவாங்கிக்கொண்டே இருப்பார்கள். இதை விளங்க முயற்சிக்கவும். I feel so sorry for you.

  2. aadhul shan says:

    நிஸ்தார் சேர் நன்றி உங்கள் மயில் மாண்டு போனது

  3. Mohamed SR Nisthar says:

    புதிய நகரசபை தலைவர் பாயிஸுக்கும் , உதவி தலைவர் குமாரவுக்கும் நல்வாழ்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All