Puttalam Online
regional-news

கடின பந்து சுற்றுப்போட்டியில் புத்தளம் லேகர்ஸ் கிரிக்கெட் கழகம் பங்கேற்பு

  • 2 April 2018
  • 282 views

ரூஸி சனூன்  புத்தளம் 

இலங்கை கிரிக்கட் சபையின் அணுசரணையுடன் புத்தளம் மாவட்ட கிரிக்கட் சம்மேளனத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் கடின பந்து 50 ஓவர்களைக் கொண்ட டிவிசன் 3 சுற்றுப்போட்டியில் சுமார் 20 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக புத்தளம் நகரிலிருந்து புத்தளம் லேகர்ஸ் கிரிக்கெட் கழகம்   உள்வாங்கப்பட்டுள்ளது,

இம்முறை 24 கடின பந்து கிரிக்கட் கழகங்கள் புத்தளம் மாவட்டத்தில் இருந்து பங்கேற்கின்றன.

அண்மையில் பல போட்டிகளில் கலந்துகொண்டு திறமைகளை வெளிக்காட்டிய புத்தளம் லேகர்ஸ் கிரிக்கட் கழகம் டிவிசன் 3 சுற்றுப்போட்டியில் சிறப்பாக விளையாட  திடசங்கற்பம் பூண்டுள்ளது,

லேகர்ஸ் கிரிக்கெட் கழக அணி சிறப்பான நிலையில் இருப்பதாகவும், இச்சுற்றுப்போட்டியில் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறுவதே எமது முதல் குறிக்கோள் என்றும், கழகத்தின் வெற்றிகள் மூலம் புத்தளத்திற்கு பெருமை சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டே வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவதாகவும் லேகர்ஸ் கிரிக்கெட்  கழக ஊடக தொடர்பாளரும், போட்டிகள் ஏற்பாட்டாளருமான ரமீஸ் தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All