Puttalam Online
regional-news

தொழில்நுட்ப பயிற்சி நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

  • 14 April 2018
  • 249 views

கல்வியின் ஊடாக சமூகத்தை வலுவூட்டல் எனும் நோக்கினை அடிப்படையாகக் கொண்டு நாடளாவிய ரீதியில் செயற்பட்டு வருகின்ற Insight Institute of Management and Technology என்ற இலாப நோக்கமற்ற நிறுவனம், புத்தளப்பிரதேச மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை கருத்திற்கொண்டு PCTT கல்லூரியினை ஆரம்பித்து தனது மூன்று வருட பூர்த்தியினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

பாடசாலை கல்வி முறைமையின் ஊடாக தமது ஆற்றல்களை வெளிப்படுத்தத்தவறிய மாணவர்கள் தொழிற்கல்வியை திறம்படக் கற்று வாழ்க்கையில் முன்னேறுவதற்கு இது மிகப்பெரிய வாய்ப்பாகும்.

PCTT இலிருந்து இதுவரைக்கும் 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் தமது கற்கை நெறிகளை பூர்த்தி செய்து விட்டு தொழிற் பயிற்சிக்காக வெளியேறியுள்ளதோடு சிறந்த தொழில் வாய்ப்புகளையும் உண்ணாட்டிலும் வெளிநாட்டிலும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும், வறிய மாணவர்களுக்கும் இக்கல்லூரியில் கற்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் பொருட்டு புலமைப்பரிசில் வசதிகளும் ஏற்பாடு செய்துக்கொடுக்கப்படுகின்றன. PCTT இல்,

1. Automobile Mechanic
2. Construction Site Supervisor
3. A/C & Refrigeration Mechanic
4. Building Service Technician (House Wiring, Welding, Plumbing, A/C Repairing)
5. Entrepreneurship & Business Management
6. Hospitality Management

போன்ற பயிற்சி நெறிகள் கற்பிக்கப்படுவதோடு கற்கைநெறிகளை பூரணப்படுத்திய மாணவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகின்றது.

விண்ணப்ப முடிவுத் திகதி : 27/04/2018

மேலதிக விபரங்களுக்கு
0768 641541 / 0768 59 79 59 எனும் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளவும்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All