Puttalam Online
international-affairs

தாக்குதல் நடாத்திய இலக்குகளை அமெரிக்கா அறிவித்தது

  • 15 April 2018
  • 359 views

அமெரிக்காவின் கூட்டுப்படை நேற்று (14-04-2018) தாக்குதல் மேற்கொண்ட சிரியா இலக்குகளை அமெரிக்க  இராணுவத் தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.

இந்த வகையில்,

– டமாஸ்கஸில் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் தயாரிப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஓர் அறிவியல் ஆய்வு மையம்.

– ஹோம்ஸ் நகரின் மேற்கே உள்ள சிரியாவின் ஓர் ஆயுதக் கிடங்கு.

– ஹோம்ஸ் அருகே உள்ள ராணுவ கட்டளை மையம் மற்றும் ராணுவத் தளவாடங்கள் சேமிக்கும் இடமாக விளங்கும் ஒரு கட்டடம்.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே வெடிச் சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

டமாஸ்கஸில் தாக்குதல் நடப்பதை சிரியாவின் அரசு தொலைக்காட்சியும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சிரியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளும் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சிரியாவின் பல்வேறு பகுதிகள் தொலைதூரம் சென்று தாக்கும் ‘டோமாஹாக்’ வகை ஏவுகணைகள் மூலம் தாக்கப்பட்டு வருவதாக அமெரிக்கா அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு இதுவரை இழப்புகள் எதுவும் உண்டாகவில்லை என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ஜேம்ஸ் மேட்டிஸ் கூறியுள்ளார்.

தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையமும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக மனித உரிமைகள் அமைப்பான “சிரியன் ஒப்சவேட்டரி போ ஹியூமன் ரைட்ஸ்”  தெரிவித்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

WAK

-dailyceylon-


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All