Puttalam Online
social

இலங்கையில் ஆலிம்கள் நிலை குறித்து சமூகம் தீவிர கவனம் செலுத்துதல் வேண்டும்.

  • 23 April 2018
  • 121 views

 – ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

இலங்கையில் முஸ்லிம் விவகார திணைக்களத்தில் பதியப்பட்ட சுமார் 2700 மஸ்ஜிதுகள்இருக்கின்றன அதேபோல் சுமார் 250 ற்கும் மேற்பட்ட மதரஸாக்கள் இருக்கின்றனசுமார் 3000 சிறுவர்பள்ளிக் கூடங்கள் இருக்கின்றன.

இவற்றில் சமார் 8000 ஆலிம்கள் தொழில் செய்கிறார்கள்இந்த ஆலிம்களது தொழில்சார் உரிமைகள்மற்றும் சலுகைகள் குறித்து சமூகம் போதிய கவனம் செலுத்தாமை நாம் இழைத்துக் கொண்டிருக்கும்மிகப் பெரிய வரலாற்றுத் தவறாகும்.

பெரும்பாலான ஆலிம்களது சம்பளம் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும்சிற்றூழியர்களது மாத கொடுப்பனவுகளையும் விட மிகவும் குறைவாகவே இருக்கின்றதுஅவர்களுக்குமுறயான நியமனம்தொழில் சார் உத்தரவாதங்கள்உரிமைகள் சலுகைகள் என எதுவுமே இல்லை.

பெரும்பாலான ஆலிம்கள் தமது கடமைகளுக்கு புறம்பாக ஊரில் கல்யாணம்கத்தம்கந்தூரி,பாத்திஹாஜனாசா சார் விடயங்கள் என பல வருமான வழிகளை கடந்த காலங்களில் (ஊர்வருமானம்)என நம்பி இருந்தனர்இப்பொழுதும் பல இடங்களில் இருக்கின்றனர்.

அவர்களுக்கு ஓய்வூதியமோஊழியர் நம்பிக்கை காப்பீடுகளோ அல்லது சேவைக்குப்பின்னரானகொடுப்பனவுகளோ என எதுவும் உத்தரவாதப்படுத்தப் படவில்லை என்பதனை நாம் அறிவோம்.

ஆலிமகள் ஓய்வூதியம்,EPF, ETF,  காப்புறுதி ஆகியவற்றை பெறுவதில் வட்டி சார்ந்த பிரகுசினைகள்  இருப்பதாக கூறப்படுகிறது,  ஆனால் இஸ்லாத்தில் மத குருமார்களுக்கென விஷேட சட்டங்கள்கிடையாதுஅது ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பிரச்சினையாக இருந்தால் அதற்கான மாற்றீடுகள்என்ன என்பதனை ஆலிம்களும் சமூகமும் தீர்மானித்தாக வேண்டும்.

இலங்கையில் இடவசதியுள்ள மஸ்ஜிதுகளில் எல்லாம் ஒரு ஹிப்ழு மத்ரஸா அல்லது கிதாபு மத்ரஸாமுளை விடுவதற்கும் வேறு சில முறையாக நிறுவன மயப்படுத்தப்படாத குர்ஆன் மதரஸாக்கள்தோற்றம் பெறுவதற்கும் ஆலிம்களுக்கான தொழில் இல்லா பிரச்சினையும் பிரதானமான காரணமாக அறியப்பட்டுள்ளது.

இன்று இலங்கையில் உள்ள சுமார் 250 ற்கும் மேற்பட்ட மத்ரஸாக்களில் இருந்தும் வருடாந்தம் சுமார்2500 ற்கும் மேற்பட்ட ஆலிம்கள் பட்டம் பெறுகிறார்கள்முறையான தராதர நிர்னயம் செய்யப்பட்டஒருமுகப்படுதாதப்பட்ட பாடவிதானம் இன்னும் இல்லாமை மிகப்பெரிய குறையாகும்.

வருடா வருடம் நாட்டிலுள்ள சுமார் 250 ம் மேற்பட்ட மதரசாக்கள்குள்ளியாக்கள்ஜாமியாக்களிற்குசுமார் சுமார் 4000 மாணவர்கள் இலவச வதிவிடக் கற்கைகளிற்காக உள்வாங்கப் படுகின்றமை,அவற்றில் பெரும்பான்மையினர் 8 ஆம் வகுப்புடன் அரச இலவசக் கற்கைகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றமை போன்ற இன்னோரன்ன விடயங்கள் மிகவும் நிதானமாக ஆறிவு பூர்வமாக ஆராயப் படல்வேண்டும்2002 – 2004  காலப்பகுதியில் அரபு மத்ரஸாக்களிற்கான  பாடவிதானங்களை ஒருமுகப்படுத்துவதற்காக  எடுக்கப்பட்ட முயற்சிகள் தற்பொழுது நிறைவுற்றுள்ள போதும் அமுல் படுத்துவதில் பல பிரச்சினைகள்உள்ளன.

பெரும்பாலான மத்ரஸாக்களுக்கு 8ஆம் வகுப்பு வரை அரச இலவச கல்வி கற்றவர்கள் சிறு வயதினர்உள்வாங்கப் படுகின்றனர்ஒருசில மத்ரஸாக்களில் சாதாரண உயர்தர கற்கைகள் இருந்தாலும்முறையான பாடநெறிகள் ஆசிரியர்கள் இல்லாமை காரணமாக எதிர்பார்க்கப்படுகின்ற அடைவு மட்டம்கேள்விக்குறியாகிறது.

வாழ்வாதார கற்கைகள் இல்லாமை மாத்திரமன்றி ஒவ்வொரு விதவிதமான கொள்கைசார் சிந்தனைசார் இயக்கங்கள சார் கல்வித் திட்டங்களையும்பெரிய ஹசரத்திற்கு தெரிந்த சிலபஸ்களையும்அவர்கள் கற்று வருவதாலும் சமூகத்தில் அவ்வப்பொழுது சர்ச்சைகளும் ஏற்படுவதால் தமதுதொழிலில் இருந்து முன்னறிவித்தல்கள் இன்றி தூக்கி எறியப்படுகின்றமையும் பகிரங்கஇரகசியமாகும்.

நூற்றாண்டு காணும் இலங்கை உலமாக்கள் நலன் பேணவென இஸ்தாபிக்கப்பட்டுள்ள அமைப்போஅல்லது முஸ்லிம்விவகார திணைக்களமோ இதுவரை ஆக்கபூர்வமான தீர்வுகளை கண்டறிந்து அமுல்படுத்தாமை பெரும் கவலைக்குரிய விடயமாகும்வக்பு சபை மற்றும் முஸ்லிம் விவகாரத்திணைக்களம் பதிவு செய்யப்பட்டுள்ள 2700 மஸ்ஜிதுகளில் சுமார் 2000 இரண்டாயிரம் மஸ்ஜிதுகளில்நிலவுகின்ற சர்ச்சைகள் பிணக்குகளை பார்ப்பதிலேயே காலத்தை கடத்துவதாக அண்மையில்அதிகாரிகளை மேற்கோள் கட்டி ஒரு செய்திக் குறிப்பு வெளிவந்திருந்தது.

இன்று பௌத்த பிரிவேனாக்களைப் பொறுத்தவரை அவற்றிற்கு அரச அங்கீகாரமுள்ளதரப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் அரச வளங்கள் சீருடைகள் அரச ஆசிரியர் சேவை மதகுருமார்களுக்கென நியமனங்கள் என இன்னோரன்ன சலுகைகளும் உரிமைகளும் இருக்கின்றநிலையில் இந்த நாட்டில் வரியிருப்பளர்கள் நாங்கள் எமது சமய கலாசார உரிமைகள் குறித்தகரிசனையின்றியே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றோம்.

காலத்துக்கு காலம் மாநாடுகள் செயலமர்வுகள் பாரிய ஊடக விளம்பரங்களோடு இடம்பெற்றாலும்சமூகம் எதிர் கொண்டுள்ள மிகப்பெரும் சவால்களில் ஒன்றான மேற்படி விவகாரம் குறித்துஆக்கபூர்வமாக நாம் எதனையுமே செய்யவில்லை என்பதே உண்மையாகும்மாறாக அவ்வாறானஏதாவது முனைப்புக்களில் ஈடுபட விரும்புவோருக்கு எதிராக வழமைபோன்று முட்டுக் கட்டைகளைபோடுவதில் மாத்திரம் பிழைப்பு நடத்தும் சில தரப்புக்கள் அவதானமாக இருக்கின்றன.

சமூகம் சார் விவகாரமாக இருந்தாலும் இன்று ஆலிம்கள் மஸ்ஜிதுகள் மதரஸாக்கள்ஜாமியாக்கள்,இஸ்லாமிய அமைப்புக்கள் விடயத்தில் பல்வேறு தரப்புக்களின் கவனம் குவிக்கப்பட்டுள்ளமைகுறித்தும் நமது கவனம் ஈர்க்கப் பட வேண்டியுள்ளது.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிகவும் நெருக்கடியான இந்த காலகட்டத்தில் உலமாக்களதும் மஸ்ஜிதுகளதும் மிம்பர் மேடைகளினதும், அரபு இஸ்லாமிய நிறுவனங்களினதும் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது மாத்திரமன்றி இன்று பெரிதும் கேள்விக்கு உற்படுத்தப் படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளமை யாவரும் அறிந்த விடயமாகும்.

சமகால விவகாரங்கள் குறித்த போதிய அறிவும் தெளிவும் அவர்களுக்கு வழங்கப் படுதல் வேண்டும், புத்திஜீவிகள், சிவில் தலைமைகள் துறைசார்   நிபுணர்களுடனான முறையான கருத்தாடல்கள் தொடர்புகள் அவர்களுக்கு இருத்தல் காலத்தின் கட்டாயமாகும்

தொடரும்

(குறிப்புஇன்று நாளை பாரிய விளம்பரங்களுடன் இரண்டு மாநாட்டை நடத்தி கடமை முடிந்ததிருப்தியோடு எவரும் இந்த விவகாரத்தி கிடப்பில் போட்டு விட வேண்டாம் என பணிவன்புடன்கேட்டுக் கொள்கின்றேன்)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All