Puttalam Online
sports

புத்தளம் லேகர்ஸ் கிரிக்கட் கழகம் வெற்றி பெற்று சம்பியனாகியுள்ளது…

ரூஸி சனூன்  புத்தளம் 
புத்தளம் லேகர்ஸ் கிரிக்கட் கழகத்துக்கும் அக்குறனை டஸ்கர்ஸ் கிரிக்கட் கழகத்திற்குமிடையில் நடைபெற்ற சிநேகபூர்வமான கிரிக்கட் போட்டியில் புத்தளம் லேகர்ஸ் கிரிக்கட் கழகம் வெற்றி பெற்று சம்பியனாகியுள்ளது.

டஸ்கர்ஸ் வெற்றிக்கிண்ணத்துக்கான, 40 ஓவர்களைக் கொண்ட இந்த சிநேகபூர்வமான போட்டி ஞாயிற்றுக்கிழமை (22) புத்தளம் சீமெந்து இன்சி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய லேகர்ஸ் கழகம் 40 வது ஓவரில் சகல விக்கட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களை பெற்றது. அஸ்கின் 57 ஓட்டங்கள், பர்சாத் 36 ஓட்டங்களை பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அக்குறனை டஸ்கர்ஸ் கழகம் 32.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்களை பெற்றது. பஸ்லூன்  மற்றும் சப்ரான் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினர்.

இதன் மூலம் 86 ஓட்டங்களால் புத்தளம் லேகர்ஸ் கழகம் வெற்றிபெற்று டஸ்கர்ஸ் வெற்றிக்கிண்ணத்தை  சுவீகரித்தது.

வெற்றிக்கிண்ணத்தினை புத்தளம் மாவட்ட கடின பந்து மத்தியஸ்தர் சம்மேளனத்தை சேர்ந்த மத்தியஸ்தர் அநுர யுகீத் லேகர்ஸ் அணி தலைவர் எம். சம்ரீனுக்கு கையளித்தார்.


One thought on “புத்தளம் லேகர்ஸ் கிரிக்கட் கழகம் வெற்றி பெற்று சம்பியனாகியுள்ளது…

  1. Rizan Ahmed says:

    Lakers Cricket Club is the one and only real cricket team in Puttalam. Playing cricket with the real cricket hardball (leather ball). Wish you all the best guys.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All