Puttalam Online
regional-news

கத்தாரில் PAQ அமைப்பின் ஆறாவது பொதுக்கூட்டம் நிறைவு

  • 26 April 2018
  • 1,757 views

(PAQ Media Unit)

கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களின் கூட்டமைப்பின் (Puttalam Association Qatar-PAQ) ஆறாவது பொது கூட்டம் (20-04-2018) கடந்த வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகையை தொடர்ந்து கத்தார் பீனிக்ஸ் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மாஸ்டர் அஹ்மத் முத்தக்கியின் கிராஅத்துடன் ஆரம்பமான இப்பொது கூட்டத்தில் நிர்வாக குழு உறுப்பினர் இஸ்மத் வரவேற்புரை நிகழ்த்த உதவி செயலாளர் சிப்ரீன் சென்ற வருட பொதுகூட்ட அறிக்கையை வாசிக்க, வருடாந்த செயற்றிட்டங்களின் தொகுப்பை அமைப்பின் பொருளாளர் இஸ்பாக் ரஹ்மான் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வின் விஷேட அதிதிகளாக இலங்கை அனைத்து சம்மேளன தலைவர், இலங்கை இஸ்லாமிய நிலையத்தின் தலைவர் உள்ளிட்ட சகோதர அமைப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்திருந்தனர். இதன்போது மாஸ்டர் சாதின் மில்ஹான் PAQ பற்றிய பாடலொன்றை மழலை குரலில் சபையோர் முன்னிலையில் பாடினார்.

சிறப்புரையினை இலங்கை அனைத்து சம்மேளன தலைவர் நிகழ்த்த, PAQ அமைப்பு மற்றும் YSF அமைப்பு ஆகியன இணைந்து சேகரித்த கண்டி அசம்பாவித சம்பவங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியினை இலங்கை அனைத்து சம்மேளன தலைவரிடம் அமைப்பின் தலைவர்கள் சகோ. மஜாஸ், சகோ. ஜெசார் இணைந்து கையளித்தனர்.

இன்னுமொரு உருக்கமான பாடலொன்றை சகோ. அமான் வழங்கினார். PAQ கடந்து வந்த பாதைகள், செய்துக்கொண்டு இருக்கும் விடயங்கள் தொடர்பில் குறுந்திரைப்படம் ஒன்று காண்பிக்கப்பட்டது. இதனை சகோ. இஷாம் மரிக்கார் நெறிப்படுத்தினார். அடுத்த அம்சமாக சகோ. மஜாஸ் அவர்கள் தலைவர் உரை நிகழ்த்த, நிறைவில் இந்நிகழ்வின் பிரதான கருபொருளான “புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு” சகோ. ரிபாஹ்வின் நெறியாள்கையில் இடம்பெற்றது.

சகோ. ரிப்கான் அவர்களின் நன்றியுரையுடன் இந்நிகழ்வு நிறைவு பெற்றது. கத்தார் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்து இந்நிகழ்வினை சிறப்பாக்கிய உறுப்பினர்களுக்கு குழுக்கள் முறையில் பரிசுகள் வழங்கப்பட்ட அதேவேளை ஏற்பாட்டுக்குழுவினர் நன்றியினை தெரிவித்து கொள்கின்றனர்.

இந்நிகழ்வின் இறுதியில் அஷேய்க் சியாஹுதீன் (மதனி) அவர்களின் உணர்வு பூர்வமான சொற்பொழிவு அனைவரையும் கண் கலங்க வைத்தமை குறிப்பிடத்தக்கது.

புகைப்பட உதவி: செளகி

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All