Puttalam Online
art-culture

இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) ஞாபகார்த்த பேச்சுப் போட்டி

  • 1 May 2018
  • 222 views

ரூஸி சனூன்  புத்தளம் 
புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம் ஒழுங்குசெய்திருந்த இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) ஞாபகார்த்த பேச்சுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (29) காலை 09 மணிமுதல் மாலை 04 மணிவரை புத்தளம் ஸாஹிரா ஆரம்பப் பாடசாலையில் நடைபெற்றது.

இப்போட்டியில் புத்தளம் மற்றும் பிற ஊர்களைச் சேர்ந்த முப்பத்தொன்பது போட்டியாளர்கள் கலந்துகொண்டு ‘இமாம் ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) ஒரு பன்முக ஆளுமை’ எனும் மகுடத்தின் கீழ் பேசி தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

மிக விறுவிறுப்பாக நடைபெற்ற இப்பேச்சுப் போட்டியில் கடும் போட்டித் தன்மை காணப்பட்டது. அப்துல் மஜீத் அக்கடமியின் கற்கைநெறி முகாமையாளர் எம்.எம். நவ்பர், தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலய பிரதி அதிபர் கலைநெஞ்சன் ஏ. ஹாஜா அலாவுத்தீன், அப்துல் மஜீத் அக்கடமியின் பணிப்பாளர் அஷ்-ஷைக் எச். அப்துல் நாஸர் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான  பரிசளிப்பு நிகழ்வுகள் எதிர்வரும் ரமழானில் பெரு விழாவாக நடைறெவுள்ளது.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All