Puttalam Online
sports

கிரிக்கட் போட்டி-உடப்பு

  • 1 May 2018
  • 72 views

-க.மகாதேவன்-

உடப்பு பிரிமியர் லீக் விளையாட்டுக்கழகம் நடத்திய மென் பந்து கிரிக்கட் போட்டி ஒன்று அண்மையில் ஆண்டிமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

வருடா வருடம் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்த முறை 12 விளையாட்டுக் கழகங்கள் இந்த மென்பந்தாட்டத்தில் பங்கு பற்றியது.இறுதிப் போட்டியில் வளர்மதி விளையாட்டுக்கழகம் ஐந்து விக்கட்டுக்களினால்  தனது வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

இறுதி பரிசளிப்பு நிகழ்வில் ஆராச்சிக்கட்டு பிரதேச சபைத்தலைவர் திரு. க.தெட்சணாமூர்த்தி, அத்துடன் இந்து ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.வி.கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது முதல் பரிசாக வெற்றிக் கேடயமும் 25 ஆயிரம் ரூபாவும் வளர்மதி விளையாட்டுக் கழகத்துக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசாக 12500 ரூபாவும் வெற்றிக் கேடயமும் ஶ்ரீராம் விளையாட்டுக் கழகத்துக்கு வழங்கப்பட்டது.

மூன்றாம் பரிசாக 5000ரூபா புல் அன்டர்ஸ் விளையாட்டுக் கழகத்துக்கு வழங்கப்பட்டது. இதில் சிறந்த ஆட்ட நாயகனாக திரு.எஸ்.தனராஜன் தெரிவு செய்யப்பட்டார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All