Puttalam Online
sports

வேப்பமடு மு.ம. வித்தியாலய மாணவர்கள் வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளனர்

  • 1 May 2018
  • 245 views

ரூஸி சனூன்  புத்தளம் 
வலய மட்ட கிரிக்கட் போட்டி ஒன்றில் புத்தளம் கல்வி வலயத்துக்குட்பட்ட நான்காம் மைல் கல் வேப்பமடு முஸ்லிம் மஹா வித்தியாலய மாணவர்கள் வரலாற்றில் முதற் தடவையாக மூன்றாம் இடம் ஒன்றினை பெற்று வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

இந்த வெற்றியின் மூலமாக  வேப்பமடு முஸ்லிம் மஹா வித்தியாலய  கிரிக்கட் அணி வீரர்கள் அடுத்து வரும் மாகாண போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

வலய மட்ட பாடசாலைக்குக்கிடையிலான இந்த கிரிக்கட் போட்டி தொடர் அண்மையில் (26) புத்தளம் தில்லையடி முஸ்லிம் மஹா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றபோதே வேப்பமடு முஸ்லிம் மஹா வித்தியாலய கிரிக்கட் அணி மூன்றாம் இடத்தினை அடைந்துள்ளது.

இப்பாடசாலையின் விளையாட்டு பொறுப்பாசிரியர் எச்.என்.எம். சிபாக் குறித்த இந்த மாணவர்களுக்கு சிறந்த பயிற்சிகளை வழங்கி இந்த வெற்றிதனை அடைவதற்கு வழி அமைத்திருந்தார்.

புத்தளம் கல்வி வலயத்தின் ஐந்து கோட்டங்களிலிருந்து ஒரு கோட்டத்தில் தலா மூன்று அணிகள் வீதம் 15 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் முதலாம் இடத்தினை தலவில நிர்மல மாதா மஹா வித்தியாலமும், இரண்டாம் இடத்தினை மாம்புரி தமிழ் வித்தியாலய அணியும் பெற்றுக்கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All