Puttalam Online
regional-news

முத்துப்பந்திய கிராமம்-ஆராச்சிக்கட்டு

  • 9 May 2018
  • 176 views

(க.மகாதேவன்)

ஆராச்சிக்கட்டு பிரதேச சபைக்குட்பட்ட முத்துப்பந்திய என்ற சிங்களக் கிராமம் கடலோரத்தில் அமைந்து காணப்படுகின்றது.

அண்மைக் காலத்தில் இந்தக் கிராமம் அடிக்கடி கடலரிப்பினால் பாதிக்கப்பட்டதுண்டு. இதனால் மக்கள் தமது அத்தியாவசியப் பொருட்களையும் தமது மீன்பிடி உபகரணங்களையும் இழந்ததுண்டு.

இதனை செய்தி ஊடகங்களில்   காண்பித்ததையிட்டு அரசாங்கம் கவனத்தில்  கவனத்தில் எடுத்ததையிட்டு கடற்றொழில் அமைச்சினால் கற்பாறைகள்    கடலோரங்களில் கடலரிப்பிற்காக    மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதற்கு இந்த ஊர் மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாாிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

இருந்தும் அது தற்போது 1.5கிலோ மீற்றர் தூரம் வரை போடப்பட்டுள்ளதாகவும் இதனை மேலும் 2கிலொ மீற்றர் தூரம் வரை போட்டுத் தருமாறு மக்கள்  வேண்டுகின்றனர்.

அத்துடன் கடலுக்குள் குறிப்பிட்ட தூரம் வரை கற்கள் இட்டால் தான் கடலரிப்பிலிருந்து தாங்கள் தப்ப முடியும் எனவும் தெரிவிக்கின்றனர்.

தற்போது தென்மேல் பருவக்காற்று ஆரம்பமாக உள்ளது. எனவே கூடிய கெதியில்  மிகுதியாக உள்ள இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு மக்கள் வேண்டுகின்றனர்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All