Puttalam Online
regional-news

மதுரங்குளி கனமூலை உம்முல் பல்ழ் பெண்கள் அரபுக்கல்லூரியின் முதலாவது வருட பட்டமளிப்பு விழா

  • 9 May 2018
  • 189 views

ரூஸி சனூன்  புத்தளம்

மதுரங்குளி கனமூலை உம்முல் பல்ழ் பெண்கள் அரபுக்கல்லூரியின் முதலாவது வருட பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு அரபுக்கல்லூரி வளாகத்தில் மிக விமரிசையாக இடம்பெறவுள்ளது.

அரபுக்கல்லூரியின் தலைவர் கனமூலை நபீல் ஹாஜி தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் 26 ஆலிமாக்கள், 4 ஹாபிழாக்கள் மற்றும் 6 சிரேஷ்ட ஹாபிழாக்கள் இதன்போது கௌரவிக்கப்படவுள்ளனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ரத்மலானை ஓய்வு பெற்ற கணக்காளர் ரிபாய் ஹாஜி கலந்து கொள்ள உள்ளார். விஷேட சொற்பொழிவினை கொழும்பு மதீனத்துல் இல்ம் அரபுக்கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் (ஹிழ்ரி) நிகழ்த்த உள்ளார்.
பட்டமளிப்பு உரையினை உம்முல் பல்ழ் பெண்கள் அரபுக்கல்லூரியின் அதிபர் அல் ஹாபிழ் ஏ.ஏ. முஜிபுர் ரஹ்மான் (மனாரி) நிகழ்த்தவுள்ளதோடு அரபுக்கல்லூரியில் கடமையாற்றும் உஸ்தாதுமார்கள் மற்றும் முஅல்லிமாக்களுக்கும் இதன்போது கௌரவிக்கப்படவுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All