Puttalam Online
regional-news

புத்தளத்தில் அதிபர் இன்றி இயங்கும் பாடசாலை

  • 9 May 2018
  • 1,063 views

புத்தளம் வடக்கு கோட்டக் கல்வி கோட்டத்திற்குட்பட்ட மணல்குன்று அல் – அஷ்ரக் முஸ்லிம் மகா வித்தியாலயம் சுமார் ஒரு மாதத்திற்கும் மேற்பட்ட காலம் அதிபர் இன்றி இயங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்பாடசாலையில் அதிபராக கடமைப்புரிந்த M.H.M. ராசிக் சேர் அவர்கள் புத்தளம் கணமூலை பாடசாலைக்கு இடமாற்றலாகி சென்றுள்ளார்.

இப்பாடசாலைக்கு உடனடியாக தகுதிவாய்ந்த அதிபர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் இதுவரைக்கும் அதிபர் நியமிக்கப்படாததால் இப்பாடசாலையின் பல அபிவிருத்திகள் தடைப்பட்டுள்ளதோடு பல நடை முறை சிக்கல்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் வலயக் கல்விப் பணிமனையில் பல முறை முறையிட்டும் கோட்டக் கல்விப் பணிப்பாளரோ அல்லது வலயக் கல்விப் பணிப்பாளரோ அசமந்தப் போக்கிலேயே செயற்படுவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது விடயமாக புத்தளம் அரசியல் தலைவர்களோ சமூகத் தலைவர்களோ அக்கரைகாட்டுவதாகவும் தெரியவில்லை என பாடசாலையின் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக கல்வி அமைச்சுக்கும் மாகாண முதலமைச்சருக்கும் அறிவிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர் தெரிவித்தார்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All