Puttalam Online
regional-news

PAQ அமைப்பிற்கு புதிய நிர்வாகக்குழு தெரிவானது

  • 11 May 2018
  • 1,130 views

(PAQ Media Unit)

கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களின் கூட்டமைப்பின் ஆறாவது பொதுக்கூட்டம் அண்மையில் நிறைவடைந்த நிலையில் புதிய நிர்வாக கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதன்போது நடப்பாண்டு தலைவராக சகோ. ஜஹாங்கீர் தெரிவு செய்யப்பட்டார்.

செயலாளராக சகோ. அம்ஜத், பொருளாளராக சகோ. ரிப்கான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். உதவி தலைவர், உதவி செயலாளர், உதவி பொருளாளராக முறையே சகோ. ஆதில், சகோ. நிப்ராஸ், சகோ. சப்ரீன் ஆகியோர் நிர்வாக அங்கத்தவர்களுக்கு மத்தியிலிருந்து தெரிவானர்.

அதேநேரம் ஏனைய உறுப்பினர்கள் அமைப்பின் ஏனைய பிரிவுகளுக்கு தெரிவு செய்யப்பட்டனர். இதன்போது அமைப்பின் யாப்பு நிர்வாக அங்கத்தவர்கள் மத்தியில் சகோ. ஹில்பியால் முன்மொழியப்பட அனைவரும் உறுதிமொழி கொண்டு பொறுப்பை ஏற்றனர்.

வழமைக்கு மாறாக இம்முதலாவது அமர்வில் புத்தளம் வலயக்கல்வி பணிமனையின் தமிழ் பிரிவு உதவிக்கல்வி பணிப்பாளர் விஷேட அதிதியாக கலந்துக்கொண்டு அமைப்பின் ஆரோக்கியமான செயற்பாடுகளை பாராட்டியதோடு மேலும் வளர்ச்சியை நோக்கி செல்லும் பொருட்டு ஆலோசனைகளையும் வழங்கினார்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All