Puttalam Online
regional-news

“புத்தளத்தில் அதிபர் இன்றி  இயங்கும் பாடசாலை” – செய்திக்கு மறுப்பு

  • 13 May 2018
  • 253 views

“புத்தளத்தில் அதிபர் இன்றி  இயங்கும் பாடசாலை” என்ற​ தலைப்பில் 2018.05.09 ஆந் திகதி பிரசுரிக்கப்பட்ட செய்தி தொடர்பாக பு/மணல் குன்று முஸ்லிம் மகா வித்தியாலய பதில் அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழுச் செயலாளர் ஆகியோர் எம்மைத் தொடர்பு கொண்டு, குறித்த பாடசாலைக்கு நிரந்தர அதிபர் ஒருவரை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் தற்பொழுது இடம்பெற்று வருவதாகவும் அதுவரை அப்பாடசாலையைச் சேர்ந்த இனூஸ் ஆசியர்  பதில் அதிபராக கடமையாற்றி வருவதுடன் பாடசாலையின்​ கற்பித்தல் மற்றும்​ அபிவிருத்தி செயற்பாடுகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

இந்த செய்தி தொடர்பாக பாடசாலை நிர்வாகம் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் எதிர்நோக்கிய அசௌகரியங்களுக்கு வருந்துகின்​றோம். ​

Admin – Puttalam Online

புத்தளத்தில் அதிபர் இன்றி இயங்கும் பாடசாலை

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All