Puttalam Online
regional-news

போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் தேசிய செயற்திட்ட நிகழ்வு.

  • 16 May 2018
  • 302 views

ரூஸி சனூன் புத்தளம்

போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் தேசிய ரீதியிலான வேலை திட்டத்தின் கீழ் புத்தளம் மாவட்டத்துக்கான செயற்திட்ட நிகழ்வு வெள்ளிக்கிழமை (11) காலை புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் போதை ஒழிப்பு தேசிய செயலணியின் ஊடாக புத்தளம் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட உதவி செயலாளர் ஈ.எம்.டீ.எம். அத்துகோரல தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விஷேட வளவாளராக இலண்டன் நகரை சேர்ந்த இடர் முகாமைத்துவ விஷேட நிபுணரும், விமானியுமான டொக்டர் சுஹைல் நாஸ்தி கலந்து கொண்டார்.

ஜனாதிபதியின் இந்த செயற்திட்டத்தினை புத்தளம் மாவட்டத்தில் ஆரம்பித்து வைத்து எவ்வாறு அதனை வெற்றிகரமாக முன்னெடுக்கலாம் என்பது தொடர்பாக இங்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டன.

புத்தளம் மாவட்டத்தின் 16 பிரதேச செயலக பிரிவுகளில் இருந்தும் 80 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All