Puttalam Online
regional-news

புத்தளம் லேகர்ஸ் கிரிக்கட் கழகம் சம்பியனாகியுள்ளது….

  • 22 May 2018
  • 195 views

ரூஸி சனூன்  புத்தளம்

புத்தளம் மாவட்ட கடின பந்து கிரிக்கெட் சங்கத்தினால் நடாத்தப்பட்ட டிவிசன் 3 கிரிக்கட் சுற்று போட்டி ஒன்றில் புத்தளம் லேகர்ஸ் கிரிக்கட் கழகம் சம்பியனாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சம்மேளனத்தின் அனுசரணையுடன் நடத்தப்படும், 50 ஓவர்கள் கொண்ட இந்த சுற்றுப்போட்டி அண்மையில் (13) புத்ளம் நாகாஸ் மைதானத்தில் நடைபெற்றது.

புத்தளம் லேகர்ஸ் கிரிக்கட் கழகமும், சிலாபம் ரெட் பெக்ஸ் கிரிக்கட் கழகமும் இந்த போட்டியில் சந்தித்துக்கொண்டன.

முதலில் துடுப்பெடுத்தாடிய சிலாபம் ரெட் பெக்ஸ் கிரிக்கட் கழகம் 30.4 ஓவர்களை எதிர்கொண்டு சகல விகட்டுகளையும் இழந்து 70 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடத்தாடிய புத்தளம் லேகர்ஸ் அணி 7.3 ஓவர்களில் 72 ஓட்டங்களைப்பெற்று டிவிசன் 3 சுற்றுப்போட்டியின் முதல் வெற்றியை பெற்றது.

அஸ்கின் ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களைப் பெற்றதோடு அஸ்ரான் 1.4 ஓவர்களில் 2 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All