Puttalam Online
regional-news

ரத்மல்யாய தாய் சேய் சிகிச்சை நிலையம் மீள் புனர் நிர்மாணம்…

  • 22 May 2018
  • 283 views

ரூஸி சனூன்  புத்தளம்

புத்தளம் தில்லையடி ரத்மல்யாய தாய் சேய் சிகிச்சை நிலையம் மீள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு பொது மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

தில்லையடி ரத்மல்யாய இளைஞர் தொண்டு சேவை கழகமான வை.சி.எஸ். அமைப்பினர் குறித்த தாய் சேய் சிகிச்சை நிலையத்தினை மீள வர்ணம் பூசி அழகு மயப்படுத்தியுள்ளனர்.

இதன் மீள் திறப்பு விழா வைபவம் அண்மையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக வைத்திய அதிகாரி திருமதி சிபாயா சிஜ்ஜீன் கலந்து கொண்டு வைத்திய ஆலோசனைகளை வழங்கி வைத்தார்.

இளைஞர் தொண்டு சேவை கழகமான வை.சி.எஸ். அமைப்பின் அங்கத்தவர்களும் இதில் கலந்து கொண்டதோடு பிரதம அதிதிக்கு நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All