Puttalam Online
other-news

அமேசன் கல்லூரியின் வருடாந்த பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் இன்று…

  • 30 May 2018
  • 200 views

ரூஸி சனூன்  புத்தளம்
கொழும்பு அமேசன் கல்லூரியின் வருடாந்த பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் இன்று (30 ம் திகதி)புதன்கிழமை பி.ப. 2 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றவுள்ளது.

கல்லூரியின் ஸ்தாபக பணிப்பாளரும், சீ.பீ.எஸ். கல்வி நிறுவனத்தின் ஸ்தாபக பணிப்பாளருமான இல்ஹாம் மரிக்கார் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில், வாணிப துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கலந்து கொள்ள உள்ளார்.

கௌரவ அதிதிகளாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, மேல்மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே. முஹம்மது பாயிஸ் ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

பல துறை சார் நிபுணர்கள், கல்விமான்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All