Puttalam Online
current

சாஹிரா பழைய மாணவர்களின் மாபெரும் வருடாந்த இப்தார் -2018

  • 2 June 2018
  • 381 views

புத்தளம் சாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்களுக்கான இப்தார் நிகழ்வு இன்ஷா அல்லாஹ் ஞாயிற்று கிழமை மாலை 5 மணிக்கு கல்லூரி அஸ்வர் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இராப்போசனத்துடன் ஏற்பாடாகியுள்ள இவ் இப்தார் நிகழ்வுக்கு பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக்குழு கேட்டுகொள்கின்றது.

சாஹிரா கல்லூரி, அது ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் இருந்து இன்று வரை ஆயிரக்கணக்கான பழைய மாணவர்களை உருவாக்கிவிட்டுள்ளது. சாஹிராவின் மண்ணில் கல்வி கற்றவர்கள் இன்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளனர். விண்வெளி ஆராய்ச்சி வரை சாஹிராவின் புகழ் ஓங்கியுள்ளது எமக்கும் எம் கல்லூரிக்குமே பெருமை.

கல்லூரியில் இருந்து வெளியாகி பல்வேறு துறைகளில் தம்மை ஈடுபடுத்தி உள்ள பழைய மாணவர்கள் தாம் கல்வி கற்ற கல்லூரியின் வளர்ச்சியில் தம்மால் முடியுமான அளவு பங்களிப்பை கடந்த காலங்களில் செலுத்தி உள்ளனர் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. இருந்தும் கடந்த சில வருடங்களாக கல்லூரிக்கும் பழைய மாணவர்களுக்குமான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளதை நம் அனைவரும் உணருகின்றோம்.

ஒரு பாடசாலையை பொறுத்தவரையில் அதன் பழைய மாணவர்களுக்கு மாத்திரமே அதன் மீது நிரந்தர உரிமை உண்டு. அதிபரோ, ஆசிரியர்களோ, மாணவர்களோ, பெற்றார்களோ அனைவருமே ஒரு பாடசாலையை பொறுத்தவரை தற்காளிகமானவர்களே. அந்த வகையில் சாஹிரா கல்லூரியின் மீதும் அதன் பழைய மாணவர்களுக்கே அதிக உரிமை உண்டு. கல்லூரியின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. மிக முக்கியமாக பௌதீக வள அபிவிருத்தியில் பழைய மாணவர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

துரதிஷ்ட வசமாக சாஹிரா கல்லூரியிற்கும் அதன் பழைய மாணவர்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகிறது. ஆகவே கல்லூரியின் எதிர்கால நலன் கருதியும், தற்கால நிலைமை கருதியும் பழைய மாணவர்களை கல்லூரியுடன் பிணைக்கும் சில செயற்திட்டங்களை பழைய மாணவர் சங்கம் உட்பட ஏனைய பழைய மாணவர் அமைப்புகள் முன்னெடுத்து வருகின்றன. அதில் ஒரு கட்டமாகத்தான் கடந்த வருடம் நோன்பு பெருநாளை முன்னிட்டு Zahirians Night 2017 எனும் பழைய மாணவர்களுக்கான இராப்போசன நிகழ்வு ஒன்று கல்லூரி வளாகத்தில் வெகுவிமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 800 பழைய மாணவர்கள் ஓரிடத்தில் கூடி தம் கல்லூரி நாட்களை மீட்டிபார்த்தனர்.

இந்த முயற்சியின் அடுத்த கட்டமாக இந்த வருடம் பழைய மாணவர்களுக்கான இப்தார் நிகழ்வொன்றை கல்லூரி பழைய மாணவர் சங்கம் மற்றும் Zahira Umbrella Association என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். இப்தார் மற்றும் இராப்போசனத்துடன் சேர்த்து சில முக்கிய நிகழ்வுகள் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

கல்லூரியை பொருத்தவரையில் இது ஒரு முக்கியமான காலப்பகுதியாக உள்ளது, இன்னும் இரண்டு வருடங்களில் நம் கல்லூரியின் 75 வருட பூர்த்தி வரவிருக்கின்றது. ஆதலால் எதிர்கால வளர்ச்சியில் பழைய மாணவர்களின் ஒத்துழைப்பு அதிகம் தேவைப்படுகின்றது. ஆகவே இந்த சிறந்த சந்தர்பத்தை பயனுள்ளதாக மாற்றுவோம். கல்லூரிக்காக நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். எதிர்காலத்தில் ஒரு சிறந்த கலூரியாக நம் சாஹிராவை மாற்றுவோம்.

குறிப்பு: முடியுமானவர்கள் மக்ரிப் தொழுகைக்காக வுழு செய்துகொண்டு வர முயற்சிக்கவும். வுழு செய்யும் பொது ஏற்படும் கால தாமதங்களை இதன் மூலம் தவிர்க்கலாம்.

 

ஏற்பாட்டு குழு.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All