Puttalam Online
other-news

முஸ்லீம் மீடியா போரமும் ஜஸ்ட் மீடியா பவுண்டேஷனும் ஏற்பாடுசெய்த இப்தாா் நிகழ்வு

  • 2 June 2018
  • 149 views

முஸ்லீம் மீடியா போரமும்  ஜஸ்ட் மீடியா பவுண்டேஷனும்  இணைந்து தமிழ் சிங்கள உள்நாட்டு வெளிநாட்டு செய்தி நிறுவனங்களின்  ஊடகவியலாளா்கள் மற்றும் பாதுகாப்புப்பிரிவில் உள்ள ஊடக அதிகாரிகளுடன் ஸ்நேகபூர்வ ஒன்று கூடல்  ஒன்றை நேற்று 31.05.2018 தெமட்டக் கொடையில் உள்ள  இஸ்லாமிக் புக் ஹவுஸ் மேல் மாடியில் உள்ள  தாருல் ஈமான் கேட்போா் கூடத்தில் 2வது முறையாகவும் நடாத்தியது.

“சமூக நல்லிணக்கத்திற்கு ஊடகவியலாளா்களின் பங்கு” எனும் தலைப்பில் சுமாா் லங்காதீபா, சன்டே ஒப்சேவா், திவயின, வீரகேசரி, தமிழ் மிரா், தினக்குரல், தினமின, டெயிலிநியுஸ் பத்திரிகைகளின் ஊடகவியலாளா்கள், மற்றும்  வெளிநாட்டு செய்திகளின் இலங்கைப் பிரநிதிகள்  என 70க்கும்  மேற்பட்ட ஊடகவியலாளா்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இந்த இப்தாா்  மற்றும் இராப்பேஷண நிகழ்வில்  அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவா் பேராசிரியா் சோ. சந்திரசேகரன்,  நோன்பு ஏனைய சமுகங்களுக்கு கற்பிக்கும்  முன்மாதிரி, தான் முஸ்லீம்களுடனும் அரபு நாடுகளில் நோன்பு முஸ்லீம்கள் பற்றி அறிந்த நல்ல பண்புகளை எடுத்துக் கூறினாா்.

முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவா்  என். எம். அமீன்,  பிரபோதைய. எங்கள் தேசம் அல்-ஹசனாத் ஆசிரியா் எம்.எச்.எம். ஹசன், பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளா் சுனித் அத்தப்பத்தும்  இங்கு  புனித நோன்பு பற்றியும்,  ஊடகவியலளா்களது பங்களிப்பு  நோன்பு மாதத்தின் சிறப்பு பற்றியும் இங்கு உரையாற்றினாா்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All