Puttalam Online
regional-news

போதைப் பொருளுக்கெதிராக செயற்திட்டம் ஆரம்பம்

  • 4 June 2018
  • 167 views

தற்போது புத்தளத்தின் இளைஞர்களின் மத்தியில் ஆபத்தான அளவில் அதிகரித்துள்ள போதைவஸ்து பொருட்களின் பாவனையை பெருமளவில் கட்டுப்படுத்துவதற்கான செயற் திட்டமொன்றை சமூகத்தின் மத்தியில் பாரியளவில் கொண்டு செல்லுதல் மற்றும் பிரச்சார முறைமைகளை ஒருங்கிணைத்தல் போன்ற செயற்திட்டங்கள் அமுலுக்கு வர உள்ளன.

இந்த செயலனியின் ஆரம்ப கட்ட நகர்வாக தமது திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதற்கான முயற்சிகள் நேற்று(2018.06.02)பெரிய பள்ளியில் ஆரம்பிக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் பெரியபள்ளிவாசல் நிர்வாகம் சார்ப்பில் பிரதம நிர்வாகி பி.எம். ஜனாப், ஜம்மியத்துல் உலமா சபை சார்ப்பில் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், நகர சபை சார்ப்பில் சகோ. M.H.M ரஸ்மி, விஷேட வைத்திய நிபுனர் M.I.M ரிபாத் அ.இ.ஜ.உ புத்தளம் கிளை செயலாளர் M.H.M பைலுர் ரஹ்மான் ஆகியோர் பங்கு கொண்டு இது தொடர்பான விளக்கங்களை வழங்கினர்.

இக்கூட்டத்தில் புத்தளம் நகர ஜும்ஆபள்ளி வாயில் இமாம்கள், நிருவாகிகள், சமூக சேவை அமைப்புக்களின் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All