Puttalam Online
regional-news

சுற்றாடல் தின நிகழ்வு-கற்பிட்டி

  • 7 June 2018
  • 74 views

(க.மகாதேவன்)

பிளாஸ்ரிக் பொருட்களை ஒழிப்போம் எதிர்கால இளம் சிறாா்களைப் பாதுகாப்போம் என்ற தொனிப் பொருளில் உலக சுற்றாடல் தின நிகழ்வு கற்பிட்டி பிரதேசத்தில்(6)திகதி காலை இடம்பெற்றது.

உலக சுற்றாடல் தினத்தை ஞாபகப்படுத்தும் முகமாக இடம்பெற்ற இந்த ஊா்வலம் கற்பிட்டி ஹரலியத்த ஹோட்டலிலிருந்து 3மீற்றர் தூரம் வரை நடைபவனியாக சென்றது.

இதன் போது மத்திய சுற்றாடல் அதிகார சபை வலய பணிமனை பிரதேச செயலகம் கற்பிட்டி கடற்படை கற்பிட்டி பொலிஸ் அத்துடன் நிர்மலமாதா சிங்கள மகா வித்தியாலயம் கற்பிட்டி அல்அக்ஸா தேசிய பாடசாலை றோமன்  கத்தோலிக்க தமிழ் வித்தியாலயங்கள் பங்கேற்றன.

அத்துடன் பு த்தளம் மாவட்ட சுற்றாடல் பணிப்பாளர் திரு.டி.எம்.கே.திசாநாயக்க அவர்களின் ஏற்பாட்டில்    கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் ஏ.எம்.இன்பாக் அதன் செயலாளர் நந்தன சோமதிலக  அத்தோடு கற்பிட்டி கோட்டசுற்றாடல் முன்னோடி ஆணையாளர் எச்.எம்.சுகைப் கற்பிட்டி கோட்ட வலய சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் ஏ.எச்.எம்.ஸாபி கலந்து கொண்டு சிறப்பித்ததோடு ஒஸ்ரியா நாட்டினர் சிலரும் கலந்து கொண்டு சிறமதானத்தில் ஈடுபட்டனர்.

இறுதியில் கற்பிட்டி பிரதேச செயலகத்தில் வைத்து பிளாஸ்ரிக் பொருட்கள் இன்சி சீமெந்து கம்பனியிடம் ஒப்படைக்கப்பட்டது.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All