Puttalam Online
regional-news

MUSLIM HANDS – புதிய ஆடைகளை உள்ளடக்கிய பொதிகள் வழங்கப்பட்டுள்ளன

  • 7 June 2018
  • 163 views

ரூஸி சனூன்  புத்தளம்

பெற்றாரை இழந்த ஏழ்மை சிறார்கள் எதிர்வரும் நோன்பு பெருநாளை குதூகலமாக கொண்டாடும் பொருட்டு அத்தகைய ஏழ்மை சிறார்களுக்கு இலவசமாக புதிய ஆடைகளை உள்ளடக்கிய பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ் நாட்டின் முஸ்லிம் ஹேண்ட்ஸ் நிறுவனத்தின் பூரண அனுசரணையோடு இலங்கை முஸ்லிம் ஹேண்ட்ஸ் நிறுவனம் இந்த புதிய ஆடைகளை உள்ளடக்கிய பொதிகளை வழங்கி வைத்துள்ளது.

மதுரங்குளி கரிக்கட்டையில் அமைந்துள்ள முஸ்லிம் ஹேண்ட்ஸ் நிறுவனத்தில் அண்மையில் (31) நடைபெற்ற இந்நிகழ்வில் அதன் பணிப்பாளர் ஏ.எம். மிஹ்லார் இவைகளை வழங்கி வைத்தார்.

முஸ்லிம் ஹேண்ட்ஸ் நிறுவனத்தின் மூலமாக மாதாந்த உதவி தொகையை பெற்றுக்கொள்ளும் 50 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இதன்போது தலா  06 ஆயிரம் ரூபா பெறுமதியான புதிய ஆடைகள் வழங்கி வைக்கப்பட்டன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All