Puttalam Online
regional-news

“சுவசெரிய” அம்புலன்ஸ் சேவைக்கு புத்தளத்தில் தொழில்வாய்ப்பு

புத்தளத்து இளைஞர் யுவதிகளுக்கு அரச தொழில்வாய்ப்பு

 

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை அரசால் தற்பொழுது மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் “1990  சுவசெரிய” இலவச அம்புயுலன்ஸ் சேவையினை நாடு முழுதும் விஸ்தரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக அவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளர்கள் 650 பேரும் அம்புலன்ஸ் வண்டி சாரதிகள் 650 பேரும் நாட்டிலுள்ள மாவட்டச் செயலகங்களினூடாக இடம்பெறும் ​நேர்முகப்பரீட்சை மூலம்​ சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்துக்கான நேர்முகப்பரீட்சை  அவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளர் பதவிக்காக 2018.06.11 ஆந் திகதியும் அம்புலன்ஸ் வண்டி சாரதி பதவிக்காக 2018.06.11 ஆந் திகதியும் வென்னப்புவ பிதேச செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது.

கீழ்காணும் தகைமையுடைய 35 வயதுக்குட்பட்டவர்கள் இதில் கலந்துகொள்ள முடியும்.

அவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளர் –  650 பேர்

க.பொ.த உ/த உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் சித்தி அல்லது வேறு பாட பிரிவில் சித்தியுடன் தாதியர் அல்லது சுகாதாரம் சார்ந்த துறையில் சான்றிதழ் அல்லது டிப்ளோமா.

 அம்புலன்ஸ் வண்டி சாரதிகள் – 650 பேர்

க.பொ.த. சா/த சித்தி, கணரக வாகன அனுமதிப்பத்திரம், 2 வருட அனுபவம்


One thought on ““சுவசெரிய” அம்புலன்ஸ் சேவைக்கு புத்தளத்தில் தொழில்வாய்ப்பு

  1. I Inrast tis ambulance டிரைவர் job !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All