Puttalam Online
regional-news

ஏத்தாளை புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா

  • 8 June 2018
  • 61 views

ரூஸி சனூன்  புத்தளம்
கல்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட  ஏத்தாளை புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இம்மாதம் 17 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மிக விமரிசையாக இடம்பெறவுள்ளது.

இதனையொட்டி 16 ம் திகதி சனிக்கிழமை மாலை வேப்பஸ் ஆராதனை நடைபெற்று 17 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை தலவில பங்கு குருவானவர் அதி வண. நெவில் சமந்த அடிகளாரின் வழிகாட்டலுடன் திருநாள் பாடல் பூசை நிகழ்வுகள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளின் மூலம் நடைபெறவுள்ளது.

பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All