Puttalam Online
regional-news

புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம் ஏற்பாடு செய்த ஒளிக்கீற்று பரிசளிப்பு விழா நிகழ்வுகள்

  • 11 June 2018
  • 201 views

ரூஸி சனூன்  புத்தளம்

புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையம் ஏற்பாடு செய்த ஒளிக்கீற்று பரிசளிப்பு விழா நிகழ்வுகள் சனிக்கிழமை (09) மாலை புத்தளம் நுஹுமான் வரவேட்பு மண்டபத்தில் இப்தாருடன் கூடிய நிகழ்வாக நடந்தேறியது.

ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தினால் நடாத்தப்பட்ட, இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் ஒரு பன்முக ஆளுமை எனும் தலைப்பிலான அவர் ஞாபகார்த்த பேச்சு போட்டி, அறிவுக்களஞ்சிய போட்டி மற்றும் புத்தளம் மாவட்ட பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தின்களுக்கான அதான் கூறும் போட்டி என்பனவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் ஒட்டு மொத்த நிகழ்வாக இவை இடம்பெற்றன.

புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எச். அப்துல் நாஸர் (ரஹ்மானி)  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கொழும்பு மதீனத் அல் இல்ம் அரபுக்கல்லூரி அதிபரும், பிரபல பேச்சாளருமான அஷ்ஷெய்க் எம்.எஸ். அப்துல் அஸீஸ் (கிழ்ரி) கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எச். அப்துல் நாஸர் (ரஹ்மானி)  அவர்களின் தந்தையான மர்ஹூம் எம்.என்.எம். ஹனிபா ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்துக்காக நடைபெற்ற அதான் கூறும் போட்டியில் முதலிடம் பெற்ற முஅத்தின் கடமையாற்றும் பள்ளிவாசலுக்கான வெற்றிக்கிண்ணத்தினை மர்ஹூம் எம்.என்.எம். ஹனிபாவின் சகோதரர் அப்துல் லத்தீப் வழங்கி வைத்தார்.

நிகழ்வுகளின் இறுதியில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வும் இடம்பெற்றன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All