Puttalam Online
regional-news

PYRAMID சமூக நல அமைப்பின் ரமழான் மாத கால உதவிக்கரம் நீட்டல்

  • 20 June 2018
  • 715 views

அல்ஹம்துலில்லாஹ். முனைய காலங்களில் போல இந்தவருடமும் எமது PYRAMID அமைப்பினால் ரமழான் மாதத்திற்கான உணவு பொதி வழங்கும் எமது திட்டம் முன்னெடுக்கப்பட்டு அல்லாஹ்வின் உதவியுடன் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டது.

இம்முறை எமது இஸ்லாம் மார்க்கத்தில் நுழைந்த முஸ்லிம் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு எமது அமைப்பினால் ரமழான் மாதத்திற்கான உணவு பொதிகள் வழங்க தீர்மானிக்கப்பட்டது.

புதிதாக எமது இஸ்லாம் மார்க்கத்தில் நுழைந்த முஸ்லிம் குடும்பங்கள் ஏனைய மக்களுடன் ஒப்பிடும் போது இவர்கள் அவர்களின் குடும்ப தொடர்புகள் அற்ற நிலையிலும் மற்றும் ஏனைய வழிகளில் உதவிகள் பெற குறைவான சந்தர்ப்பம் கொண்ட நிலையிலும் இருப்பதனால் இவர்களுக்கு இம்முறை உணவு பொதிகள் வழங்க வேண்டும் என்ற நோக்கில் எமது PYRAMID அமைப்பானது தனது சேவையை தொடர்ந்தது.

இதனடிப்படையில், சுமார் 60 இஸ்லாம் மார்க்கத்தில் நுழைந்த குடும்பங்களின் விபரங்கள் தேடி பெறப்பட்டு, எம்மால் திரட்டப்பட்ட நிதிக்கமைய மற்றும்,

◉ குடும்ப பின்னணி,
◉ வீட்டின் நிலை /வசதி,
◉ குடும்பத்திற்கு உதவிகள் இன்மை,
◉ குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை,
◉ குடும்பத்தில் உழைக்கும் நபர்களின் எண்ணிக்கை முக்கியமாக உழைக்கும் பணம் குடும்பத்தை பராமரிக்க போதுமானதாக இல்லாமை,
◉ கணவனை இழந்த விதவை குடும்பங்கள்

போன்ற வரைக்குள்ளான குடும்பங்ககளை நேரடியாக கலவிஜம் செய்து உறுதி படுத்திய பிற்பாடு 15 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டன.

இக்குடும்பங்களுக்கு அரிசி, மாவு, சீனி, Noodles, செமன்டின், பருப்பு.. etc போன்ற அத்திவசிய பொருட்களை உள்ளடக்கியதான உணவுப்பொருட்கள் அடங்கிய 1600/= ரூபாய் பெறுமதியான உணவு பொதிகளும், 450/= ரூபாய் பெறுமதியான அளவில் Iyman Chicken இறைச்சிக் கடையில் இறைச்சி கொள்வனவு செய்வதற்காக வவுச்சர்களும் (vouchers) வழங்கப்பட்டன. இவற்றை எமது PYRAMID அமைப்பின் அங்கத்தவர்கள் வழங்கிவைத்தனர்.

தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களில் விதவைகள், முதியவர்கள் மற்றும் நோயுற்றவர்ள் இருந்தமையினால் அவர்களுக்கு ரூபாய் 3000/=, 2000/= மற்றும் 1000/= பெறுமதியான வவுச்சர்கள் Shamreens ஆடையகத்தில் உடைகள் வாங்குவதற்காக வழங்கப்பட்டன.

PYRAMID
Puttalam Youths’ Rapid Aid Movement IDevelopment
Social Welfare Organization
Puttalam


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

போதை

  • Wednesday,11 Jul 2018
சுவடிக்கூடம்View All