Puttalam Online
sports

பரஹதெனிய ஏ அணியினர் வெற்றி வாகை சூடி சம்பியனாகியுள்ளனர்

  • 26 June 2018
  • 212 views

ரூஸி சனூன்  புத்தளம்

புத்தளம் நகரின் மிகப்பழைமை வாய்ந்ததும் மிகப்பலம் வாய்ந்ததுமான விம்பிள்டன் கால்பந்தாட்ட கழகத்தின் 50 வருட கால பூர்த்தியின் பொன்விழாவையொட்டி நடாத்தப்பட்ட அணிக்கு தலா 07 பேர்களை கொண்ட கால்பந்தாட்ட தொடரில் பரஹதெனிய ஏ அணியினர் வெற்றி வாகை சூடி சம்பியனாகியுள்ளனர்.

இத்தொடரின் இரண்டாம் இடத்தினை புத்தளம் கல்பிட்டி பேர்ல்ஸ் அணியினர் பெற்றுக்கொண்டுள்ளனர்.

நோன்பு பெருநாளை முன்னிட்டு நடாத்தப்பட்ட இந்த மெகா கால்பந்தாட்ட தொடர் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (23,24) முழுநாளும் நடைபெற்றது.

விம்பிள்டன் கால்பந்தாட்ட கழகத்தின் தலைவர் வை.எம். நிஸ்தாதின் வழிகாட்டலில் அதன் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் வீரர்கள், அங்கத்தவர்கள் அனைவரும் ஒருமித்து இணைந்து இந்த போட்டி தொடரினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

தொடரில் முதலிடம் பெறும் அணிக்கான ஒரு இலட்சம் ரூபா பரிசு தொகைக்கான அனுசரணையை அவ் அணியின் போஷகரும், புத்தளம் நகர சபை உறுப்பினருமான அலி சப்ரி ரஹீம் வழங்கி இருந்தார்.

இந்த போட்டி தொடரில் பாணந்துறை, களுத்துறை, குருணாகல், பரஹதெனிய மற்றும் புத்தளம் மாவட்டத்திலிருந்து மொத்தமாக 29 அணிகள் பங்கேற்றிருந்தன.

விலகல் முறையிலான இந்த தொடரின் இறுதி போட்டியில் பரஹதெனிய ஏ அணியினரும், கல்பிட்டி பேர்ல்ஸ் அணியினரும் மோதிக்கொண்டதில் 06 : 01 கோல்களினால் பரஹதெனிய ஏ அணி வெற்றி பெற்று சம்பியனாகியது.

பரிசளிப்பு நிகழ்வில் விம்பிள்டன் கழக போஷகரும், புத்தளம் நகர சபை உறுப்பினருமான அலி சப்ரி ரஹீம், அதன் தலைவர் வை.எம். நிஸ்தாத் உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள், உப தலைவர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாக உறுப்பினர்கள், மூத்த வீரர்கள், அனுசரணையாளர்கள், பயிற்றுவிப்பாளர் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

புத்தளம் நகர வரலாற்றில் முதல் தடவையாக, தொடராக போட்டிகளை பார்வையிட வருகை தந்த பார்வையாளர்கள் 10 பேர் தெரிவு செய்யப்பட்டு இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

சிறந்த கோல் காப்பாளராக பரஹதெனிய ஏ அணியின் கோல் காப்பாளர் சமூடியும், அதிக கோல்களை செலுத்தியவராக பரஹதெனிய ஏ அணியின் நைஜீரிய நாட்டு வீரர் தாவூதும், சிறந்த பந்து விநியோக வீரராக கல்பிட்டி பேர்ல்ஸ் அணியின் ஆசிக்கும், தொடர் நாயகனாக கல்பிட்டி பேர்ல்ஸ் அணியின் கோல் காப்பாளர் எம்.எச். குமாரவும் தெரிவாகினர்.

சம்பியன் மற்றும் ரணரப் அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்களுடன் முறையே ஒரு இலட்சம் ரூபா, மற்றும் 50 ஆயிரம் ரூபாய்களை அதிதிகள் இதன் போது வழங்கி வைத்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All